புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு அவசியம்: பாலகுருசாமி வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜி.வி.ஜி. கல்லுாரி, அகமதிப்பீட்டு கழகம் மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டு கழகம் சார்பில், புதிய தேசிய கல்வி கொள்கை–2020 குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஜி.வி.ஜி கலையரங்கில் நடந்தது. இதில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
நீண்ட காலமாக, பரிசீலிக்கப்பட்டு, தற்போது, புதிய தேசிய கல்வி கொள்கை–2020 தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. தரமான கல்வியை அனைவருக்கும் வழங்க, புதிய கல்வி கொள்கை முக்கிய தேவையாக மாறியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு, படித்தோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், தரமான கல்வியை தருவதில், பின்தங்கியே உள்ளோம். அனைத்துறை வளர்ச்சிக்கும், கல்வியே ஆதாரமாக உள்ளது. கல்வி கொள்கையானது பட்டதாரிகளை மட்டும் உருவாக்கும் நிலையை மாற்றி, அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய, மனிதர்களை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும்.
இத்தகைய கல்வி கொள்கையை உருவாக்காமல் விட்டதால், இன்னும், வளரும் நாடாகவே இருக்க வேண்டிய நிலை வரும். இத்திட்டத்தில், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வி முறையை மாற்றினால், நாட்டை முன்னேற்றும் வகையிலான, இளைய தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
கல்லுாரி செயலாளர் சுமதி கருத்தரங்கை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா தலைமை வகித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu