மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
X

பள்ளி மாணவர்களுக்கு நோட் புத்தகம், இனிப்பு கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மடுவின்கரை மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை பூங்கொத்து, இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கி வரவேற்றார்.

தமிழகத்தில்19 மாதங்களுக்கு பிறகு இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தந்ததால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு இன்று காலை நேரில் சென்றார்.

முதலமைச்சரை பள்ளிக்கூட வாசலில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து "வணக்கம், முதலமைச்சருக்கு எங்களது வணக்கம்" என்று மாணவ-மாணவிகள் இருகை கூப்பி வணங்கினார்கள். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் மாணவ- மாணவிகளுக்கு வணக்கம் தெரிவித்தப்படியே வந்தார்.

"நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு நீங்கள் வருகை தந்துள்ளதால் உங்களை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று மாணவ-மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

மாணவ-மாணவிகளும் முதலமைச்சரிடம் பேசினார்கள். அப்போது மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களையும் வழங்கினார். பள்ளிக்கூடத்தில் இருந்த அனைத்து வகுப்பறைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். பள்ளியில் சுமார் 10 நிமிடங்கள் மாணவ, மாணவிகளுடன் மகிழ்ச்சியாக பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்