2025 முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள்: சிபிஎஸ்இ
சிபிஎஸ்சி - கோப்புப்படம்
வரும் 2025ஆம் ஆண்டு பத்து மற்றம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், இரண்டு பொதுத் தேர்வுகளை எழுதும் முதல் தொகுதி மாணவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒரே தேர்வு என்பதால், இந்த அழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், முதல் பொதுத்தேர்வில் ஒரு மாணவர் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தால், அவர் இரண்டாம் பொதுத்தேர்வை எழுதுவதிலிலுருந்து விலக்கும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2023ஆம் ஆண்டில் உதயமானது. இது குறித்து மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு நேர்காணலில், 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் ஒரு கல்வியாண்டில் இரண்டு தேர்வுகள் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஒருவர், முதல் பொதுத் தேர்வை நன்கு எழுத முடியும் என்று முடிவெடுத்தால், அவர் இரண்டாவது பொதுத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெறலாம் என்றும், இரண்டுத் தேர்வுகளும் கட்டாயமாக்கப்படாது என்றும் அப்போது பிரதான் தெரிவித்திருந்தார்.
அதாவது, முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத் தேர்வு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறும் என்றும், இவ்விரண்டு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ, அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu