12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து
சிபிஎஸ்சி - கோப்புப்படம்
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்திருந்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூலை15- ஆக.26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம் என சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் கோவிட் தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிளஸ்டூ தேர்வுகளை ரத்து செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவிட் சூழல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு முக்கியம் என கருதி,12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu