ஒரேநாளில் வெளியான சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

ஒரேநாளில் வெளியான சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
X

CBSE +2 and 10 results released - ஒரேநாளில் வெளியான சிபிஎஸ்இ 12 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

CBSE +2 results released : Chennai region at third place -கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது.

CBSE +2 and 10 results released - மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த கல்வியாண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக உள்ள நிலையில், 98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்று இருந்தன.

CBSE +2 and 10 results released - மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CBSE +2 results released : Chennai region at third place - 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் (cbse.nic.in , cbseresults.nic.in) வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது, பள்ளி மாணவர்களின் மொபைல் போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். தேர்வு சதவீதம் 94.4 சதவீதம் ஆகும்.

CBSE +2 and 10 results released - சென்னை மண்டலத்தில், 98.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil