தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை

தமிழகத்தில் 10, 11 மற்றும்  12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
X
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்- லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12, வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கொரோனா ஒமிக்ரான் பரவல் மேலும் தீவிரமாக உள்ள சூழலில், தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை, விடுமுறை அறிவித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வரும் 19,ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த தேர்வு தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனவும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture