பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்ல செய்தி! 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்

பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்ல செய்தி! 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்
X
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி, கடந்த 23 ஆம் தேதியும் நிறைவு பெற்றது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு நிறைவு பெற்றுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வேதியியல் தேர்வின்போது வினா எண் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வேதியியல் பாட வினாத்தாளில், பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது, கேள்வி எண் 5-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல்,

பகுதி 2-ல் கேள்வி எண் 29-ஐ எழுதியவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 வேதியியல் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!