பி.என்.ஒய்.எஸ். படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
2024-2025-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 23 முதல் ஜூலை 8ம் தேதி வரையில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
கடந்த 8ம் தேதியுடன் சேர்க்கை முடிவடைந்த நிலையில், பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-2025-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை பட்டப் படிப்பு மருத்துவம்) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை பட்டப் படிப்பு மருத்துவம்) பட்டபடிப்புக்கான தொகுப்பேட்டினை, (விண்ணப்பப் படிவம், தகவல் www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பப்படிவங்கள் இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
பி.என்.ஒய்.எஸ். பட்டப்படிப்பு குறித்த விவரங்கள்:
இந்த படிப்பிற்கான கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் காலம் 5 ஆண்டு ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 22.07.2024 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்: 22.07.2024 மாலை 5 மணி வரை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது வரை நேரில் சமர்ப்பிக்கவோ நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்: 22.07.2024 மாலை 5.30 மணி வரை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu