சென்னையில் 4 கல்வி நிறுவனங்களுடன் பிஐஎஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை, 17 நவம்பர் 2023 அன்று 4 கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்திய தரநிர்ணய அமைவனம் , தரமணியில் உள்ள தென் மண்டல அலுவலகத்தில், பின்வரும் 4 கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
1. தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR), தரமணி, சென்னை
2. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, சென்னை,
3. வேல் டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரி, சென்னை
4. ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சென்னை
தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிறுவனங்களுடனான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இந்தத் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பணியகத்தின் தொழில்நுட்பக் குழுக்களின் மூலம் தரநிலைப்படுத்தல் நடவடிக்கையில் பங்கேற்றல், தரநிலைப்படுத்தலுக்குத் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு ஆதரவைப் பெறுதல்,கூட்டாக கருத்தரங்குகள், மாநாடுகள், பட்டறைகள் அல்லது விரிவுரைகளில் பங்கெடுத்தல், தரம் மற்றும் தரநிலைப்படுத்தல் தொடர்பான பொதுவான ஆர்வமுள்ள பிற இலக்கியங்கள், வெளியீடுகளை பரிமாறிக்கொள்ளுதல்,கல்விநிலையங்களில் தர நியமங்கள் குறித்த தலைப்புகளின் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தல் , ஒரு சிறந்த தரத்துடன் சம்பந்தப்பட்ட துறையில், ஒரு மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்,சோதனை மற்றும் இணக்க மதிப்பீடு, ஆய்வக வசதிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் போன்றவை சாத்தியமாகும்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் உஷா நடேசன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கணேஷ் வைத்தியநாதன், வேல் டெக் மல்டி டெக், டாக்டர் ரங்கராஜன், டாக்டர். சகுந்தலா இன்ஜினியரிங் கல்லூயின் முதல்வர் டாக்டர்.வி.ராஜாமணி, ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கே.பொற்குமரன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில், சென்னை பிஐஎஸ் அலுவலகத்தின் விஞ்ஞானி-எஃப் & துணை தலைமை இயக்குநர் (தெற்கு மண்டலம்) யுஎஸ்பி யாதவ், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
ஜி. பவானி, விஞ்ஞானி / இயக்குனர் & தலைவர் (சென்னை கிளை அலுவலகம்), மீனாட்சி கணேசன், விஞ்ஞானி & தலைவர் (தென் மண்டல ஆய்வகம்) மற்றும் முக்கிய அலுவலர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்விடத்தில் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu