தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டப்படிப்பு: ஜன. 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் இ.ரா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது என தமிழக அரசால் (அரசாணை எண் 56; 2012) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படிப்பை முடித்தவா்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியா்களாக பணியாற்றலாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோவின் இணையவழி விண்ணப்ப படிவம், விளக்கக் கையேடு ஆகியவற்றை கடந்த கடந்த மாதம் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாள்.
இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் இருப்பது அவசியம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு https://tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu