பி.இ. செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடங்குகிறது: அண்ணா பல்கலை அறிவிப்பு

பி.இ. செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடங்குகிறது: அண்ணா பல்கலை அறிவிப்பு
X
தமிழகத்தில், பி.இ. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.இ. மற்றும் பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஜூன் 28 முதல், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான செய்முறை தேர்வு செப்டம்பர் 5,6ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்க் படிப்புகளுக்கு ஜூலை 18ல் தேர்வு தொடங்குவதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!