ஆக.16ல் பொறியியல் கலந்தாய்வு; கலை கல்லூரிகளுக்கு ஜூன் 27ல் விண்ணப்பம்

ஆக.16ல் பொறியியல் கலந்தாய்வு; கலை கல்லூரிகளுக்கு ஜூன் 27ல் விண்ணப்பம்
X
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ல் தொடங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ல் தொடங்குகிறது. ஜூன் 20 முதல், ஜூலை 19 வரை மாணவர்கள் பள்ளிகள் மற்றும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றார்.

பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 22,முதல், அக்டோபர் 14, வரை நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் 15,16, ஆம் தேதிகளில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மூன்று தினங்களுக்கு நடைபெறும். கலந்தாய்வு முடிந்த ஏழு நாட்களுக்குள், மாணவர்கள் முன்வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பொறியியல் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை; கடந்தாண்டு வசூலித்த கட்டணமே இந்தாண்டும் வசூலிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தனிக்குழு அமைக்கப்படும். ஆகஸ்ட் 8,ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி மேலும் தெரிவித்தார்.

கலை அறிவியல் கல்லூரி விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர, ஜூன் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றி விண்ணப்பிக்க, ஜூலை 15ஆம் தேதி கடைசி நாள் என்றார்

ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் பிற இட ஒதுக்கீடுகளும் சமூக நீதி அடிப்படையில் முறையாகப் பின்பற்றப்படும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil