கேம்பஸ் இண்டர்வியூவில் அசத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள்

கேம்பஸ் இண்டர்வியூவில் அசத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள்
X
வளாக நேர்காணல் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை பெற்று தரும் அரசு பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் உங்களுக்காக

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், அரசு பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த தகவல்கள் உங்களுக்காக

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிவிட்டது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களின் முதல் விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி போன்ற அரசு கல்லூரிகள் தான். அதன் பிறகு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம் அரசு கல்லூரி

ஒரு சில அரசு கல்லூரிகளைத் தவிர பிற அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்காது, சிறந்த கற்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பு இருக்காது என்ற பொதுவான எண்ணம் பலரிடையே இருந்து வருகிறது. ஆனால் அரசு கல்லூரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் அங்கு வளாக நேர்காணல் மூலம் நூற்றுக்கணக்காணோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.

இந்த அரசு கல்லூரிகளில் புகழ்பெற்ற தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன .

அரசு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூ-வில் தேர்வு பெற்றவர்களின் சதவீதம்

  • கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டில் 90% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
  • காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 79% பேர்
  • திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 77% பேர்
  • சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 70% பேர்
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 56.5% பேர்
  • பர்கூரில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு பொறியியல் கல்லூரியில் 53.2% பேர்
  • போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 52.5% பேர்
  • தருமபுரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 50.7% பேர்

மேலே உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுதருவதோடு, அங்கு கட்டணங்களும் குறைவு என்பதால், மாணவர்கள் இந்த கல்லூரிகளை விரும்பினால் தேர்வு செய்துகொள்ளலாம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!