அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா
X

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கு நிகழ்விற்கு வந்திருந்தோரை, 3ம் ஆண்டு மாணவி ஜோதிமீனால் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜோ. நளதம் தலைமையுரை வழங்கினார். முதலாமாண்டு மாணவர் சதீஷ், விருந்தினரை அறிமுகம் செய்தார்.


இதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான, சேகர் இன்ஜினியரிங் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ராஜசேகரன், மாணவர்கள் அனைவருக்கும் தனது தொழிலை பற்றியும், அதில் வேலை செய்யும் பணியாளர்கள் பற்றியும், ஒரு தொழில் எப்படி இருக்க வேண்டும் என்றும் முதலாளிகான தகுதிகள் குறித்து பேசினார்.


தன்னம்பிக்கை ஒன்றே மூலதனம் என்றும், விடாமுயற்சியும் செய்யும் தொழிலின் மீது அதீத ஈடுபாடு களுடன் பணி செய்ய வேண்டும் என்ற அவர், முதலாளி ஆவதற்கு வெறும் படிப்பு மட்டும் போதாது; அதீத அனுபவமும் வேண்டுமென்று என்றார்.


மற்றொரு விருந்தினரான, சக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல், தொழில்முனைவோர் பற்றியும் , எத்தகைய தொழிலை தொடங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விளக்கினார், விழாவின் முடிவாக சர்வதேச வணிக துறை தலைவர் செ. பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story
photoshop ai tool