பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
X
பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதிவாய்ந்த டிப்ளமோ பட்டயப்படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கும். ஜூலை 23 தேதியுடன் சேவைகள் நிறுத்தப்படும்.

விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள்

  • விண்ணப்பிக்கும் முறை : www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.inஎன்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இணையதளம் மூலமாக விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் நாள் : துவங்கும் நாள் : 24.06.2022 முடிவுறும் நாள் : 23.07.2022
  • பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.300/-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் வாயிலாக செலுத்தலாம்.
  • இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாதவர்கள் "The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions - 2022-23, ACGCET, Karaikudi" என்ற பெயரில் 24.06.2022க்கு பிறகு பெற்ற வரைவோலையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
  • SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை
  • விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் இரண்டாமாண்டு பி.இ. பி. டெக் பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்,

மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com , www.accet.co.in, www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில் "INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில் பார்க்கவும்.

மேலும் தகவல் அறிய 04565-230801, 04565-224528 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings