தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
X

கோப்பு படம் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளான பிப்ரவரி 19-ல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கபடுவதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வரும் 19ஆம் தேதி நடத்தப்படுகிறது. எனவே, அன்றைய தினம் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம், புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5 ,6 ,9 ,11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!