எளிய முறையில் அலகிட்டு வாய்பாடு எழுதுதல்..
பைல் படம்
Alagitu Vaipadu For Thirukural in Tamil-அலகிட்டு வாய்பாடு
அசை பிரிக்கும் முறைகள் :
நேரசை
தனிக்குறில் - க
தனிக்குறில் ஒற்று - கல்
தனிநெடில் - கா
தனி நெடில் ஒற்று -கால்
நிரையசை
இரு குறில் - கட
இரு குறில் ஒற்று - கடல்
குறில் நெடில் இணைந்து - விழா
குறில் நெடில் இணைந்த ஒற்று - விழார்
வாய்பாடு
ஓரசைச்சீர் : ஈற்றில் வருவது
1 .நேர் - நாள்
2 .நிரை - மலர்
3 .நேர்பு ( நேர் - நேர் ) - காசு
4 .நிரைபு ( நிரை - நேர் ) - பிறப்பு
ஈரசைச்சீர் :
1 .நேர் - நேர் - தேமா
2 . நிரை - நேர் - புளிமா
3 .நிரை - நிரை - கருவிளம்
4 .நேர்- நிரை - கூவிளம்
மூவசைச்சீர்
காய்ச்சீர்
1 . நேர்- நேர் - நேர் - தேமாங்காய்
2 . நிரை - நேர் -நேர் - புளிமாங்காய்
3. நிரை - நிரை - நேர் - கருவிளங்காய்
4 . நேர் - நிரை - நேர் - கூவிளங்காய்
இதனைப் பயன்படுத்தி நாம் எளிய முறையில் அலகிடலாம் .
வ .எண் | சீர் | அசை | வாய்பாடு |
1 | எப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
2 | எத்|தன்|மைத் | நேர்-நேர்-நேர் | தேமாங்காய் |
3 | தா|யினும் | நேர்-நிரை | கூவிளம் |
4 | அப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
5 | மெய்ப்|பொருள் | நேர்-நிரை | கூவிளம் |
6 | காண்|ப | நேர்-நேர் | தேமா |
7 | தறி|வு | நிரைபு | பிறப்பு |
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவடைந்துள்ளது .
எளிய முறையில் அலகிடுதல்
சீர் பிரிக்கும் முறை :
1.முதலில் மெய்யெழுத்துகளைப் | பிரிக்கவும் .
2.மெய்யெழுத்தோடு 1 எழுத்து இருந்தால் (குறில் அல்லது நெடில்) அப்படியே விடவும் .
3.மெய்யெழுத்தோடு 2 எழுத்து இருப்பின் குறில் எனில் விட்டுவிடவும்.
நெடில் |எனில் பிரிக்கவும் .
4.மெய்யெழுத்து இல்லாமல் 2 ,3 எழுத்து இருப்பின் இருகுறில் | பிரிக்கவும் . குறி்ல் நெடில் இணைத்து,| பிரிக்கவும்.
குறில் எழுத்து- நெடில் எழுத்து அறிதல்
1.அ,இ,உ,எ,ஒ-இந்த வரிசை எழுத்துகள் குறில் எழுத்துகள் .
2.ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ-நெடில்அதாவது (தா,தீ,தூ,தே,தோ,தௌ)இது போன்ற துணை எழுத்துகள் உடையவை நெடில் எழுத்துகள் ஆகும் .
அசை பிரித்த பின்னர் எழுத்துகளுக்கு(குறில்,நெடில்) எண்கள் இடுக.
குறில்-1
நெடில் -1
மெய்யெழுத்து -0
அசை எழுதுதல் :
1 ,10 -நேர்
11,110 -நிரை -இவற்றைப் பயன்படுத்தி எழுதலாம் .
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் .
-இக்குறட்பாவினை அலகிடுக .
வ.எண் | சீர் | அசை | வாய்பாடு |
1 | 11 | 110| 10 அரி|யவற்|றுள் | நேர்-நேர்-நேர் | தேமாங்காய் |
2 | 10 | 10 எல்|லாம் | நேர்-நேர் | தேமா |
3 | 11 |1 அரி|தே | நிரை-நேர் | புளிமா |
4 | 1 1 | 1 | 10 பெரி|யா|ரைப் | நிரை-நேர்-நேர் | புளிமாங்காய் |
5 | 1 | 10 பே|ணித் | நேர்-நேர் | தேமா |
6 | 11 | 10 தம|ராக் | நிரை-நேர் | புளிமா |
7 | 1 1 0 கொளல் | நிரை | மலர் |
இக் குறள் மலர் என்னும் வாய்பாட்டால் முடிவடைந்துள்ளது .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu