மாணவர்களே ஷாக் ஆகாதிங்க! கல்லூரி படிப்புகளுக்கு கட்டணம் உயர்வு
இது தொடர்பாக, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு, ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்தது. தற்போது உயர்ந்து குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க். படிப்புகளுக்கு, ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டு எம்.சி.ஏ., படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500ம், அதிகபட்சமாக ரூ.1,94,100ம், 2 ஆண்டு எம்.பி.ஏ. படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000ம், அதிகபட்சமாக ரூ.1,95,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கவும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189 ஆகவும், பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 ஆகவும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu