அரசு இசைப்பள்ளியில் மாணவ - மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பம்
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை ஆரம்பமாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு இசைப்பள்ளியில் மிகத்திறமை வாய்ந்த கலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்க படுகிறது.
இது குறித்த விபரங்கள் :
கல்வித்தகுதி :
குரலிசை, வயலின், மிருதங்கம் பயில குறைந்த பட்சம் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நாதஸ்வரம், தவில், தேவாரம் பயில எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கல்விக் கட்டணம் : ஒரு ஆண்டுக்கு ரூபாய் 150/- மட்டும்.
பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : மாவட்ட அரசு இசைப்பள்ளி, கலை பண்பாட்டு வளாகம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு,
திருநெல்வேலி – 627007.
இந்த பள்ளியில் பயிற்சி பெறும் மாணவ,மாணவியருக்கு இலவச புத்தகம், மிதி வண்டி, இலவச பஸ்பாஸ், சலுகை கட்டணத்தில் ரயில் பயணம் செய்ய வசதி உண்டு. மூன்று வருட படிப்பில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மாதம் ரூ.400/- வழங்கப்படும்.
இசைப்பள்ளியில் பயிற்றுவிக்கும் கலைகள் மற்றும் அட்மிஷனுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விபரம் :
குரலிசை – 9894096044
நாதஸ்வரம்- 9944545381
தவில் – 6380691427
தேவாரம் – 9952258281
பரதநாட்டியம் – 9442893006
வயலின் – 8220399258
மிருதங்கம் - 8124105050
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu