கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு

கலை,அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு
X
Student Admission - சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வருகிற செப்டம்பர் 16ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்

Student Admission -தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது முதல், மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு பொறியியல் மட்டுமல்லாது கலை அறிவியல் படிப்புகளிலும் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைந்து, கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. இதேபோல் தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பப்பித்துள்ள நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனைக்கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகம் விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் செப்டம்பர் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்