aathichudi tamil வாழ்க்கைத் தேவைக்கான ஒழுக்கத்தினை கற்றுக்கொடுப்பது ’’ ஆத்திச்சூடி’’ ......படிங்க....

aathichudi tamil  வாழ்க்கைத் தேவைக்கான ஒழுக்கத்தினை  கற்றுக்கொடுப்பது ’’ ஆத்திச்சூடி’’ ......படிங்க....
X

ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆத்திச்சூடி (கோப்பு படம்)

aathichudi tamil தமிழ் இலக்கியத்தில் உயிரெழுத்துக்களைப் பற்றி பாடம் நடத்த வேண்டும் எனில் ஆத்திச்சூடியைக் கற்பிக்கலாம்.ஆசிரியர்கள் இதனைத்தான் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். படிச்சு பாருங்க...

aathichudi tamil

ஆத்திச்சூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.

தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

aathichudi tamil


ஏற்பது இகழ்ச்சி

ஐயம் இட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஒளவியம் பேசேல்

அஃகம் சுருக்கேல்

உயிர்மெய் வருக்கம்

கண்டொன்று சொல்லேல்

ஙப் போல் வளை

சனி நீராடு

ஞயம்பட உரை

இடம்பட வீடு எடேல்

இணக்கம் அறிந்து இணங்கு

தந்தை தாய்ப் பேண்

நன்றி மறவேல்

பருவத்தே பயிர் செய்

மண் பறித்து உண்ணேல்

இயல்பு அலாதன செய்யேல்

அரவம் ஆட்டேல்

இலவம் பஞ்சில் துயில்

வஞ்சகம் பேசேல்

அழகு அலாதன செய்யேல்

இளமையில் கல்

அரனை மறவேல்

அனந்தல் ஆடேல்

ககர வருக்கம்

கடிவது மற

காப்பது விரதம்

கிழமைப்பட வாழ்

கீழ்மை அகற்று

குணமது கைவிடேல்

கூடிப் பிரியேல்

கெடுப்பது ஒழி

கேள்வி முயல்

கைவினை கரவேல்

கொள்ளை விரும்பேல்

கோதாட்டு ஒழி

கௌவை அகற்று

சகர வருக்கம்

சக்கர நெறி நில்

சான்றோர் இனத்து இரு

சித்திரம் பேசேல்

சீர்மை மறவேல்

சுளiக்கச் சொல்லேல்

சூது விரும்பேல்

செய்வன திருந்தச் செய்

சேரிடம் அறிந்து சேர்

சையெனத் திரியேல்

சொற் சோர்வு படேல்

சோம்பித் திரியேல்

aathichudi tamil



தகர வருக்கம்

தக்கோன் எனத் திரி

தானமது விரும்பு

திருமாலுக்கு அடிமை செய்

தீவினை அகற்று

துன்பத்திற்கு இடம் கொடேல்

தூக்கி வினை செய்

தெய்வம் இகழேல்

தேசத்தோடு ஒட்டி வாழ்

தையல் சொல் கேளேல்

தொன்மை மறவேல்

தோற்பன தொடரேல்

நகர வருக்கம்

நன்மை கடைப்பிடி

நாடு ஒப்பன செய்

நிலையில் பிரியேல்

நீர் விளையாடேல்

நுண்மை நுகரேல்

நூல் பல கல்

நெற்பயிர் விளைவு செய்

நேர்பட ஒழுகு

நைவினை நணுகேல்

நொய்ய உரையேல்

நோய்க்கு இடம் கொடேல்

aathichudi tamil


பகர வருக்கம்

பழிப்பன பகரேல்

பாம்பொடு பழகேல்

பிழைபடச் சொல்லேல்

பீடு பெற நில்

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

பூமி திருத்தி உண்

பெரியாரைத் துணைக் கொள்

பேதைமை அகற்று

பையலோடு இணங்கேல்

பொருள்தனைப் போற்றி வாழ்

போர்த் தொழில் புரியேல்

மகர வருக்கம்

மனம் தடுமாறேல்

மாற்றானுக்கு இடம் கொடேல்

மிகைபடச் சொல்லேல்

மீதூண் விரும்பேல்

முனைமுகத்து நில்லேல்

மூர்க்கரோடு இணங்கேல்

மெல்லி நல்லாள் தோள்சேர்

மேன்மக்கள் சொல் கேள்

மை விழியார் மனை அகல்

மொழிவது அற மொழி

மோகத்தை முனி

aathichudi tamil


வகர வருக்கம்

வல்லமை பேசேல்

வாது முற்கூறேல்

வித்தை விரும்பு

வீடு பெற நில்

உத்தமனாய் இரு

ஊருடன் கூடி வாழ்

வெட்டெனப் பேசேல்

வேண்டி வினை செயேல்

வைகறைத் துயில் எழு

ஒன்னாரைத் தேறேல்

ஓரம் சொல்லேல்

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?