அரசுப்பள்ளி மாணவர்களுக்கான7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி
மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம். தள்ளுபடி செய்தது
நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இதன் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சட்டத்திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களுக்கும் இதே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்ஸ்ரீ என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,' 12ம் வகுப்பு மட்டுமே அரசு பள்ளியில் படித்திருந்தாலும் அந்த மாணவர்களுக்கும் 7.5சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் திருச்சியைச் சேர்ந்த ஜோனிஸ்ராஜ் என்பவர் தரப்பிலும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,' தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,'இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu