/* */

என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு 50 சதவீதம் கல்வி கட்டணம் குறைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு

ஏற்கனவே உள்ள கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

HIGHLIGHTS

என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு 50 சதவீதம் கல்வி கட்டணம் குறைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு
X

அண்ணா பல்கலைக்கழகம்  - கோப்புப்படம் 

சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார்கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர இயந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 சதவீதம் கட்ட ணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.

Updated On: 5 Jan 2024 1:16 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...