நீட் தேர்வை தமிழில் எழுத 31,803 மாணவர்கள் விருப்பம்
நாடு முழுவதும், இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்ந்து படிக்க, நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாகும். நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி, கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் தொடங்கியது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, முதலில் மே மாதம் 6ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. பின்னர், மே 15 ஆம் தேதி வரையும் அதை தொடர்ந்து, மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரையும் என, அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, முதல்முறையாக நடப்பாண்டு, 18 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக, தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இவர்களில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத 31 ஆயிரத்து 803 பேர் விண்ணப்பித்துள்ளதாக, நீட் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu