பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 93.59

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: கரூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 93.59
X

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் கரூர் மாவட்டம் 93.59 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. ௯௩.கரூர் மாவட்டத்தில் மார்ச் 2024 – இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 பள்ளிகளைச் சார்ந்த 5617 மாணவர்கள். 5749 மாணவிகள் ஆக மொத்தம் 11366 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்படி 5133 மாணவர்கள். 5505 மாணவிகள் ஆக மொத்தம் 10638 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 93.59ஆகும். இவ்லாண்டு மாணவர்கள் 9138% தேர்ச்சியும் மாணவிகள் 9578 நேர்ச்சியும் அடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகள் 87.24% தேர்ச்சி விழுக்காடும். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.12 தேர்ச்சி விழுக்காடு, தனியார் பள்ளிகள் 98.70 தேர்ச்சி விழுக்காடும் பெற்றுள்ளன. 67 பள்ளிகள் 100% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதில் 21.அரசுப் பள்ளிகள் அடங்கும். மாநில அளவில் 3வது இடம் கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.49% லிருந்து இக்கல்வி ஆண்டில் 93.59% ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business