கல்லூரிகளில் இனி நேரடி செமஸ்டர் தேர்வு : உயர்கல்வித்துறை

கல்லூரிகளில் இனி நேரடி செமஸ்டர் தேர்வு : உயர்கல்வித்துறை
X

கோப்பு படம்

அனைத்து கல்லூரிகளிலும், இனி செமஸ்டர் தேர்வுகள், நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று, தமிழக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறைந்ததால், கடந்த செப்டம்பர் மாதம், கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கல்லூரிகளில் நடக்கும் செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பை, உயர் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அனைத்து வகை பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களில், எல்லா வகை செமஸ்டர் தேர்வுகளும், நேரடியாக மட்டுமே நடைபெற வேண்டும். இந்தத் தேர்வுகள் அனைத்தும், கோவிட் பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், உயர்கல்வித்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags

Next Story