Zincovit Tablet Uses in Tamil-ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் zincovit tablet uses in tamil

Mandla News Today | Mandla News
X

Mandla News Today | Mandla News

Zincovit Tablet Uses in Tamil - உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் அதனை சரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு மாத்திரை தான் ஜின்கோவிட்

Zincovit Tablet Uses in Tamil உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் அதனை சரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு மாத்திரை தான் ஜின்கோவிட். உடலின் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பதற்கு இந்த மாத்திரை மிகுந்த பலனளிக்கும். செலினியம் என்ற சக்தி இந்த மாத்திரையில் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை உயிரணு வளர்ச்சியை அதிகரித்து திசுக்கனில் வளர்ச்சிக்கு உதவும்.

நீரழிவு நோயாளிகள், இதயம் சம்பந்தப்பட்ட நோய், காசநோய் போன்றவற்றுக்கு இந்த மாத்திரை ஊட்டசத்தை அதிகரிக்க பயன்படும்

என்னென்ன சத்துகள் உள்ளன

ஜின்கோவிட் மாத்திரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி3, வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6, வைட்டமின் ஈ போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இதைத்தவிர, துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், மெக்னீசியம், அயோடின், செலினியம், குரோமியம், மாலிப்டினம் போன்றவையும் உள்ளது.

மாத்திரை எடுத்துக்கொள்ளும் முறை Zincovit Tablet Uses in Tamil

  • நோயாளிகளின் வயது மற்றும் உடல்நல பிரச்னைகளை பொறுத்து எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
  • மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.
  • ஜின்கோவிட்டின் நன்மைகள்
  • உடல் சோர்வு மற்றும் பலவீனமாக இருப்பவர்கள்
  • கர்ப்பிணி பெண்களுக்கு கருவளர்ச்சி நன்றாக இருக்க
  • ஊட்டச்சத்து தேவைப்படுபவர்கள்
  • நாள்பட்ட வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கொடுத்தாலும், மருத்துவர் அறிவுரை படி எடுத்துக் கொள்ளலாம்,
  • வைட்டமின் சத்து குறைபாடு உள்ளவர்கள்
  • கண்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளுக்கு
  • உடலில் தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு
  • பசியின்மை பிரச்னை, உடல் எடை குறைவு போன்றவற்றிக்கு

பக்க விளைவுகள்


பொதுவாக ஜின்கோவிட் மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும், ஒருசிலருக்கு அரிப்பு, வாய் வறண்டு போதல், தூக்கமின்மை, உடல் சோர்வு, உடல் சூடு, சுவை இல்லாமல் இருத்தல், மூட்டு பகுதியில் வலி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஹோட்டலுக்கு போக வேண்டாம், வீட்டிலேயே செய்யுங்கள்!..காய்கறி ஃப்ரைஸ்