சத்து குறைபாடுகளை குணமாக்கும் ஜிங்கோபர் மாத்திரை ..
Zincofer Tablet Uses in Tamil
Zincofer Tablet Uses in Tamil
உடல் ஆரோக்யம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் தற்கால நாகரிக உலகில் எல்லோருமே பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம்.ஆனால் இதில் பலர் அவர்களுடைய ஆரோக்யம் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இயல்பாகவே நம்முடைய சாதாரண அன்றாட செயல்பாட்டின் போது உடல் ரீதியாக ஏதாவது ஒரு சிறு மாற்றத்தைக் கண்டால் அதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். ஆனால் ஒரு சிலர் இதனைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்களுடைய வேலையில் கவனம் செலுத்தி வருவர்.
இதனால் ஆரம்பகட்டத்தில் இருந்த நோய் அதாவது அறிகுறிகளை நமக்கு காண்பித்த நோய் தற்போது முற்றிய நிலையில் பெரும்தொந்தரவு அளிக்கும்போது அடித்து பிடித்து போய் ஆஸ்பத்திரிக்கு போனாலும் பயனில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் .அந்த வகையில் சத்துகுறைபாட்டினால் உள்ளோருக்கு இந்த ஜிங்கோபர் மாத்திரையானது நல்ல பலனை அளிக்கும் என டாக்டர்கள் இதனை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.
ஜிங்கோபர் மாத்திரையானது 6 மருந்து பொருட்களின் கூட்டுக்கலவையால் தயாரிக்கப்படுகிறது. அஸ்கார்பிக் அமிலம், சயனோகோபாலமைன், பெர்ரஸ் பியூமரேட், போலிக் அமிலம், பிரிடாக்சின், மற்றும் துத்தநாகம் ஆகிய மருந்து பொருட்களின் கலவையினால்தான் ஜிங்கோபர் மாத்திரையானது தயாரிக்கப்படுகிறது.
zincofer tablet uses in tamilஎலும்புகள், தசைகள், இணைப்பு திசு, மற்றும் இரும்பை உறிஞ்ச அஸ்கார்பிக்அமிலம் பயன்படுகிறது. சயனோகோபலமைன் மூளை, நரம்புகள், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகியவற்றுக்கு உதவுகிறது. ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியின்போது ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்ல பெர்ரஸ்பியூமரேட்டிலுள்ள இரும்பு பயனளிக்கிறது. உடலில் ஏற்படும் செயல்களான ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு போலிக் அமிலம்உதவுகிறது. உடலுக்கு தேவையான முக்கிய வளர்சிதை மாற்ற செயல்களுக்கு பிரிடாக்சின் உதவுகிறது. உடலிலுள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு துத்தநாகம் துணையாகிறது. ஜிங்கோபர் மாத்திரையானது சத்துகுறைபாடு உள்ளவர்களுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு, நாம் சாப்பிடும் உணவுகளில் குறைந்த அளவிலான இரும்பு சத்துக்களை சேர்த்துக்கொள்ளல், கர்ப்ப கால மற்றும் பாலுாட்டுபவர்களுக்கு ஏற்ப டும் இரும்பு சத்து குறைபாடு ஆகியவற்றை குணப்படுத்தஇந்த மாத்திரை பயனளிக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த மாத்திரையினை உங்களின் ஆரோக்யத்திற்கு ஏற்ப உங்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் இதனை எத்தனை நாட்கள் சாப்பிடுவது என பரிந்துரைப்பார். ஆகாரத்திற்கு முன்பாகவே அல்லது ஆகாரத்திற்கு பின்னதாகவோ இதனை எடுத்துக்கொள்ளலாம். இதனையும் டாக்டர் சொல்வார். இந்த மாத்திரையினை தண்ணீரோடு சேர்த்து விழுங்க வேண்டுமே தவிர மென்று சாப்பிடக்கூடாது, அல்லது உடைத்தும் சாப்பிடக்கூடாது.
இதுவே ஜிங்கோபர் சிரப் ஆக இருந்தால் அளவுக்காக கொடுக்கப்பட்ட கப்பில் நன்கு குலுக்கி ஊற்றிய பின் மருந்தினை வாய் வழியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை, மருந்துகளை சூர்ய ஒளி படாதவாறு சற்று குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டியது முக்கியம்.
பக்கவிளைவுகள்
வயிற்றுவலி, மலச்சிக்கல், டயோரியா, வாந்தி வருதல், ஆகியவைகள் அனைத்தும் இம்மாத்திரை சாப்பிட்டவருக்கு ஏற்பட்டால் அது மாத்திரையின் பக்கவிளைவுகளாக கருதலாம்.
முன்னெச்செரிக்கை
இம்மாத்திரை சாப்பிடுபவர் இதற்கு முன்பாக அலர்ஜி போன்ற உபாதைகளினால் பாதிப்படைந்திருந்தால் அதனை டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடுதல் நலம். அதேபோல் அனீமியா, தொற்றுகளால் பாதிப்பு, இரும்புசத்துகுறைபாடு, ரத்தத்தில் குறைந்த அளவிலான பொட்டாசியம் மற்றும் கால்சியம்இருத்தல், இதய கோளாறு, சர்க்கரை வியாதி, ரத்தப்போக்கு, வயிறு மற்றும் குடல், குடிப்பழக்கம், கிட்னி அல்லது கல்லீரல் பிரச்னைகள், ஆகியவைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டாலும் டாக்டரிடம் முன்னதாக சொல்லிவிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள், பாலுாட்டுபவர்கள் , குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தாலும் டாக்டர் பரிந்துரைக்காமல் இம்மாத்திரையினை சாப்பிடக்கூடாது.
zincofer tablet uses in tamilமாத்திரை சீட்டு இல்லாமல் கடையில் வாங்கிய மருந்துகளை சாப்பிடுதல், டாக்டர் ஏற்கனவே வேறு நோய்களுக்கு பரிந்துரைத்த மருந்து சாப்பிடுதல், அல்லது நீங்களாகவே இயற்கை வைத்திய முறையில் சாப்பிடும் மருந்துகள், ஹெர்பல் மருந்து ஏதேனும் சாப்பிடுபவராக இருந்தால் அது உள்ளிட்ட அனைத்துமே டாக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வது மிக மிக அவசியம். அப்போதுதான் அதற்கேற்றவாறு உங்களுக்கு தகுந்த மருந்தை டாக்டர் பரிந்துரைக்க இயலும். எனவே டாக்டர்களிடம் செல்லும்போது நாம் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளை மறக்காமல் சொல்லுங்கள். அப்போதுதான் அதற்கு ஒத்து போகும் மருந்துகளை அவரால் பரிந்துரைக்க இயலும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ரத்த சோகை, ரத்தகுறைபாடு, கர்ப்ப சிக்கல்கள், தோல் தொற்று,மன பிரச்னைகள்,வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிப்படைந்தோருக்கும் டாக்டர்கள் இந்த மருந்தினை நோயாளியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அளவினை பரிந்துரைப்பார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu