Zerodol P Tablet Uses in Tamil-ஜெரோடோல் பி மாத்திரை பயன்பாடுகள் தமிழில்..

Zerodol P Tablet Uses in Tamil
X

Zerodol P Tablet Uses in Tamil

Zerodol P Tablet Uses in Tamil-ஜெரோடோல் மாத்திரையானது வலியைக் குறைக்கும் அசெக்ளோஃபெனாக் மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் பாராசிட்டமால் ஆகிய இரண்டு மருந்துகளால் ஆனது.

Zerodol P Tablet Uses in Tamil

ஜெரோடோல் மாத்திரை 'ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்' (NSAID) எனப்படும் மருந்துகளின் குழுவிற்கு சொந்தமானது.

தலைவலி, லேசான ஒற்றைத் தலைவலி, தசை வலி, பல் வலி, முடக்கு வாதம், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ், கீல்வாதம் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் போன்ற நிலைகளில் வலியைப் போக்க உதவுகிறது.

ஜெரோடோல் மாத்திரை மருந்தை உங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அளவிலும், கால அளவிலும் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றுக் கோளாறுகளைத் தடுக்க இதை உணவு அல்லது பாலுடன் உட்கொள்ள வேண்டும்.

மருந்தை சரியான நேரத்தில் தொடர்ந்து உட்கொள்வது அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. மருத்துவர் சொல்லும் வரை தொடர்ந்து மருந்தை உட்கொள்வது அவசியம்.

Zerodol P Tablet Uses in Tamil பக்கவிளைவுகள்

பெரும்பாலான பக்க விளைவுகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை என்றாலும் தொடர்ந்தாலோ அல்லது பக்கவிளைவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட்டாலோ மருத்துவரை அணுகவும்

பொதுவான பக்க விளைவுகள்

இந்த மருந்தை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு. நெஞ்செரிச்சல், பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். சிலசமயம் தலைச்சுற்றல், தூக்கம் அல்லது பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

Zerodol P Tablet Uses in Tamil முன்னெச்சரிக்கை

நீண்ட கால சிகிச்சைக்காக இந்த மருந்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்கள் சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு மற்றும் இரத்தக் கூறுகளின் அளவை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

நீண்ட கால பயன்பாடு வயிற்று இரத்தப்போக்கு மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுப்பாலோ ஜெரோடோல் மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.

பொதுவான எச்சரிக்கை

மருத்துவர் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது