நீங்க அடிக்கடி கோபப்படுவீர்களா? முதல்ல இதைப் படியுங்க.....

நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டும் எனில் நாம் வாழும்போதுபல கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். மனிதர்களுக்கான குணமான கோபத்தைகட்டுப்படுத்துவதால் நாம் என்னென்ன பயன்களை பெறுகிறோம் என்பதை பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீங்க அடிக்கடி கோபப்படுவீர்களா?  முதல்ல இதைப் படியுங்க.....
X

வாழ்வில் நமக்கு தேவையானது கிடைக்காவிட்டாலோ, நாம் அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது நமக்கு தேவையானது நிராகரிக்கப்பட்டாலோ மனம்அதற்கு காட்டும் எதிர்வினை உணர்வே கோபம் ஆகும்.

பெண்களைவிட ஆண்களுக்கே பொதுவாக கோபம் அதிகமாக வருகிறது. வயதில் பெரியவர்களை விட சிறியவர்களுக்கே கோபம் அதிகமாக வருகிறது. இன்றைய இளையதலைமுறையினருக்கு வரும் கோபம் சற்று விசித்திரமாகவே உள்ளது.சரியான நேரத்தில் சரியான விதத்தில் வெளிக்காட்டப்படும் கோபம் நல்லவிஷயங்களுக்கே வழி வகுக்கிறது. உரிமையோடு வெளிக்காட்டப்டும் கோபத்திற்கு பின்னால் உள்ள காதலும்அன்பும் நட்பும்அக்கறையும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.நமது கட்டுப்பாடிற்கு மீறி செல்லும்போது தான் கோபம் பொல்லாததாகி விடுகிறது. இன்று மனிதர்கள்சகிப்புத்தன்மை பெரிய அளவில் குறைந்துவிட்டதால் கோபம் பல நேரங்களில் தனிப்பட்ட மனித உறவுகளுக்கு பங்கம் விளைவிக்கிறது.

மனம் உடல் பாதிப்பு

நாட்பட்டகோபத்தால் மனமும் உடலும் மிகபெரிய விதத்தில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம்கோப்படுகிறோம் என்ற உணர்வு புரிதல் நமக்கு உண்டாவதற்கு முன்னரே நமது மூளையில் உள்ள ஒருபகுதி துாண்டப்பட்டு விடுகிறது. அதுபின்னர் மூளையின் ஹைபோதலாமஸ் என்ற பகுதியை துாண்டி பிட்யூட்டரி கோளத்தில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உற்பத்தியை துாண்டி பல நோய்கூட்டட்ஙகளுக்கு வித்திடுகிறது. நாட்பட்ட கோபத்தினால் மூளையின் பிராண்டல் கார்டெக்ஸ் என்னும் மிக முக்கிய பகுதி பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி அதன் காரணத்தால் மூளையின் ஞாபக திறனும் முடிவெடுக்கும் திறனும் அதிகமாக குறைந்துவிடுவதாக ஆய்வுகள் பகர்கின்றன. வேதனையையும் கவலையையும் விட கோபமே ஒருவரின் நல்லஆரோக்யத்தை உருக்குலைக்கும் விஷம் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கோபம் நான்கு வகைப்படும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என வெளி வரும் கோபம். இது சட்டென வரக்கூடியது. பல நேரங்களில் அந்த நேரத்தோடு அது மறந்தும்போய்விடும். வாழ்வில் நமக்கு அடிக்கடி உண்டாகும் கோபம் இந்த வகையை சார்ந்ததே. மனதில் கோபம் கொப்பளித்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் மிகவும் அமைதியாக இருப்பதும் எல்லாாம் சரியாக இருப்பது போல பாவனைகள் செய்வதும் ஆகும்.இந்த வகையான கோபம் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம்போகாது.எந்த நேரத்திலும் மீண்டும் தலை துாக்கலாம். நல்ல விஷயங்களுக்காக உரிமையோடு படும் கோபம் பலநேரங்களில் மனித உறவுகளின் நற்புரிதலுக்கு வழி வகுக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சுற்றுப்புற சூழலை சீர்குலைக்கும் அட்டகாசங்கள் போன்ற சமூக நல பாதிப்பு விஷயங்களுக்கு எதிராக காட்டப்படும் கோபம் நியாயமானதே.செய்யும் தவறை கண்டித்து அதை திருத்தும் நோக்கத்தில் உண்டாகும் கோபம் மிக நல்லதே. அது மனித உறவுகளை பலப்படுத்தும்.

நோய்களுக்கு வழி

கோபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில்தான் பலர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். கோபத்தால் இதய துடிப்பு அதிகமாகிறது.மன அழுத்தம் அதிகமாவதோடு பதட்டம்,மயக்கம் போன்ற குறிகுணங்களும் உண்டாகின்றன. உடலின் ரத்தசர்க்கரை அளவு அதிகமாகி சர்க்கரைநோய் உண்டாகிறது. உடல் எடையும் கூடிவிடுகிறது.

சீரண உறுப்புகளுக்குசெல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து உடலின் வளர்சிதை மாற்றமும் சீர்குலைந்து விடுகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல வித புற்று நோய்கள் உண்டாவதற்கு இதுவே அடிப்படை காரணம் ஆகிவிடுகிறது. பக்கவாதம், வயிற்று புண்கள், சீரண கோளாறுகள் அனைத்தும் உண்டாகின்றன.மனஅழுத்தம், மனபதட்டம், அல்சீமர் நோய் வரை உண்டாகிறது. நாட்பட்ட கோபத்தினால் மனிதர்களின் நகைச்சுவை உணர்வு பெரிய அளவில் குறைந்துவிடும்.

பயமும் கவலை

பயமும் கவலையுமே கோபத்திற்கான அடிப்படை காரணிகள் . பயத்திற்கு பின்னால் பதட்டமும் கவலைக்கு பின்னால் இழப்பும் ஏமாற்றமும் மிக அழகாக மறைந்தும் ஒளிந்தும் இருக்கின்றன. பயமும் வலியும் கோபத்திற்கான அடிப்படை காரணிகள் . இதனால் மனிதனின் ஆயுட்காலம் குறைகிறது. மனதிற்கு ஆனந்தத்தை தரும் செரடோனின், எண்டோர்பின்ஸ், மற்றும் டோபமின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு எப்போதும் மனதை கவலையும் வெறுமையும் ஆக்ரமிக்கிறது. அதன் காரணமாக பல விதமான மன நோய்களும் உண்டாகிறது. மனம் சற்று ஆசுவாசப்பட்ட பின்னர் பேசுவது நல்லது. கோபப்படுவதை விட அந்த கோபத்திற்கான தீர்வை கண்டுபிடிப்பது கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிகிச்சை.எப்படி கட்டுப்படுத்துவது?

*இயற்கையை ரசிப்பது, நடைபயிற்சி செல்வது, போன்ற கோபத்தினால் உண்டாகும்மனஅழுத்தத்தை குறைக்கும்.

*வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ரசிக்க துவங்குவது கோபத்தை குறைப்பதற்கு மட்டும் இல்லாமல் நல்ல உடல் மற்றும்மன ஆரோக்யத்திற்கும் நல்லது.

*எண்களை பின்னோக்கி எண்ணுவது கோபத்தைக்குறைக்கும் மிக நல்ல பயிற்சி.

சித்த மருத்துவ புரிதல்படி பீய்ச்சிப் பாய்கிற பித்தத்தை பீஸ்புல் ஆக்குவதே முதல் தீர்வு. வில்லங்கப்படுத்தும் வாதத்தையும் வழிக்கு கொண்டுவர வேண்டும்.

*உணவில் பித்தத்தை அதிகம் ஆக்கும் புளிப்பு, உப்பு, மற்றும் கார்ப்பு சுவை உள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும்.

*அதிகம் சூடான உணவுகளுக்கு டாட்டா சொல்லி விடவும்

*குளிர்ச்சியான உணவுகள் மிக நல்லவை. உணவில் உலர்பழங்களான பாதாம், அத்தி, பேரீச்சை, ஆகியன மிக நல்லது.

*பித்தத்தை தணிக்க எலுமிச்சையை மிஞ்சிய மூலிகை எதுவும்இல்லை. மாதுளையும் மிக நல்லது. இதுமனதிற்கு ஆனந்தம் தரும் மூலிகை.அதிலும் நாட்டு மாதுளை நல்லது.

*தினமும் குறைந்தது ஏழு மணி நேர துாக்கம் அவசியம் ஆகும்.

*அமுக்கராவில் உள்ள தாவர கூறுகள் கார்டிசோல் மற்றும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கும். இதை சூரணமாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி கோபத்தை குறைப்பதற்கும் கோபத்தால் உண்டாகும் மனபதட்டத்தையும் சேர்த்துகுறைப்பதற்கான அருபெரும்மருந்துகள்.

*பிரம்மியில் உள்ள தாவர நலக்கூறுகள் மனதை அமைதிப்படுத்தும். இதை நெய்யாக செய்து உண்ணலாம்.

*துளசி, சங்குபுஷ்பம், ஆகிய மூலிகைகளும் சாலசிறந்தவை. துளசி கோபத்தால் உண்டாகும். மன அழுத்தத்தையும் மன பதட்டத்தையும் குறைக்கும்.

*ஆசனங்களில் பாலாசனம்,சுகாசனம், சர்வாங்காசனம் மற்றும் சவாசனம் மிக நல்லவை. மூச்சு பயிற்சி மிக நல்லது. அதிலும் ஷீதலி பிராணாயாமம் மிக நல்லது.

மொத்தத்தில் கோபப்படுவதால் நம்மை சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்படுவதோடு நம்உடலும் மனமும் சேர்ந்து சின்னாபின்னம் ஆகிறது. சுயநல எண்ணத்தோடாவது விடை கொடுப்போம் கோபத்திற்கு.

Updated On: 7 Aug 2022 11:26 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...