நீங்க தினமும் யோகா செய்யுறீங்களா?..... நோய் தீர்க்கும் யோகாசனம்....படிச்சு பாருங்க...

yoga,meditation good for our health உடல் ஆரோக்யத்தினை மேம்படுத்த தினமும் உடற்பயிற்சிகள் என்பது இக்காலத்திற்கு தவிர்க்கமுடியாத ஒன்று. அந்த வகையில் யோக பயிற்சிகளை தினந்தோறும் செய்து வந்தால் நம் ஆரோக்யம் மேம்படும்...படிங்க...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீங்க தினமும் யோகா செய்யுறீங்களா?..... நோய் தீர்க்கும் யோகாசனம்....படிச்சு பாருங்க...
X

நல்ல ஆரோக்யத்தை மேம்படுத்த  யோக  பயிற்சியை மேற்கொள்ளுங்க   (கோப்பு படம்)

yoga,meditation good for our health

நாகரிக உலகில் அவரவர்கள் தம்முடைய ஆரோக்யத்தினைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பணம், வேலை, தொழில் என பிசியாகவே இருந்துவிட்டு கடைசி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு லபோ...திபோ...என்று அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். நோய் முற்றிய பின்னர் எந்த டாக்டராலும் ஒன்றுமே செய்ய முடியாது. ஆரம்பத்தில் நம் உடலில் சிறு மாறுபாடு தெரிந்தால் கூட போய் டாக்டரிடம் சொல்லி ஆலோசிப்பதே நலம் பயக்கும்.அதனை விடுத்து அப்போது சும்மா இருந்துவிட்டு அந்த நோய் வளர்ந்து முற்றிய பின் தம்மைப் பாடாய் படுத்தும்போது ஆஸ்பத்திரிக்கு அலறி அடித்துக்கொண்டு போய் என்ன பயன்? நீங்களே சொல்லுங்களேன்...

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

வரும் முன் காப்போம் என்ற தார்மீக அடிப்படையில் நோய்கள் நம்மைத் தாக்காமல்இ ருக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அதனை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அனைவரின் கட்டாய வேலைகளில் ஒன்று. அந்த வகையில் அளவான சாப்பாடு, எண்ணெயில் பொறித்தவைகளுக்கும் தடா, பேக்கரி தடா, பரோட்டா தடா, என அனைத்துக்கும் ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். வாயைக்கட்டவேண்டும் முதலில். பின்னர் உடற்பயிற்சி, யோகா, தியானப்பயிற்சி, நடைப்பயிற்சி இதில் ஏதாவது இரண்டு பயிற்சிகளை வழக்கமாக தினந்தோறும் செய்து வந்தால் உடல் பெருக்காது... நல்லஆரோக்யம் மேம்படும். நோய்கள் எளிதில் அண்டாது....

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

உடலை எப்போதும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சி உதவுகிறது. உடலிலுள்ள ஊளைச்சதைகளை ஒழித்து சுறுசுறுப்பையும், சக்தியையும், வலிமையையும், பெருமளவில் உருவாக்கிக் கொள்வது நலம் பயக்கும். உடலிலுள்ள ஜீவ உறுப்புகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதன் மூலம் மூப்பையும், பிணியையும், எளிதில் அணுக ஒட்டாமல் தடுத்துக்கொள்ளலாம். ஆயுளை வளர்த்துக்கொள்வது, மனவலிமையை பெருக்கிக்கொள்வது , உடலுக்கும் மனதிற்கும் நாம் அடிமையாக இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

யோக பயிற்சி

யோகபயிற்சி ஒருவர் செய்யவேண்டும் என்றால் சும்மா செய்துவிட முடியாது. அவருடைய உடம்பில் ஓரளவு ஆற்றலும், ஆரோக்யமும் இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் யோகாசனத்தை செய்ய முடியாது .சிறந்த உடல் வலிமை இல்லாதவர்களாலும் செய்ய முடியாத ஆசனப்பயிற்சிகள் பல உண்டு.

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

யோக சாஸ்திரப்படி குணப்படுத்த இயலாத நோய் பெரும்பாலும்இல்லை என்றே சொல்லிவிடலாபம். ஆனால் அத்தகைய ஆசனங்களை எல்லாம் தகுந்த ஓர் குரு இல்லாமல் தானாக சொந்தமாக செய்துவிட முடியாது.

ஆங்கிலவைத்தியம் என்று சொல்லப்படும் அலோபதி மருத்துவ முறைதான் இன்று உலகெங்கும் புகழ்பெற்றதாக உள்ளது. பண்டிதர் முதல் பாமரர் வரை அதனை நோக்கித்தான் பயணிக்கின்றனர். காரணம் மக்கள் அதில்தான் நம்பிக்கை அதிகம் வைக்கின்றனர். காரணம் மருத்துவத்துறையின் அயராத ஆராய்ச்சி முன்னேற்றங்கள். ஆபரேஷன், ஊசி போடுதல் போன்ற சிறந்த உத்திகளால் நோய்கள் குணமாக்கப்படுகிறது. இருந்தும் பல நோய்களுக்கு சரிவர மருந்து கண்டுபிடிக்காததால் சிகிச்சையே இல்லாமல் இருக்கிறதும் என்பது உண்மைதான்.

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

சர்க்கரை நோய்

டயாப்படிஸ் எனப்படுகிற நீரிழிவு சர்க்கரை நோயை நாம் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். கணையத்திலிருந்து சரிவர சுரக்காத நிலையில் இந்த நோய் தோன்றுகிறது என்பதை ஆங்கில டாக்டர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் அந்த ஹார்மோன் எதனால் சுரக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியாது. அதாவது நீரிழிவு நோயின் அடிப்படைக்காரணம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அதனால் அந்த நோயைக் குணமாக்குவது அவர்களால்இயலாமல் போகிறது.

அப்படியானால் சர்க்கரை நோயாளிளுக்கு இவர்கள் அளிக்கும் சிகிச்சைகள் எல்லாம் சிறிதும் பயனே இல்லையா எனக் கேட்கலாம். பயன் உள்ளதுதான் ஆனால் ஓரளவிற்குத்தான்.

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

எப்படிஎன்றால், இயற்கையாகச் சுரக்க வேண்டிய இன்சுலினுக்குப் பதிலாக மிருகங்களின் கணையத்திலிருந்து செயற்கை இன்சுலினைத் தயாரித்து, அதனை நோயாளிகள் உடம்பில் ஊசி மூலம் செலுத்துகின்றனர். அதனால் அந்நோய் ஒவ்வொரு நாளும் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. நோயைக்கட்டுப்படுத்துவது வேறு, குணப்படுத்துவது வேறு என்பதற்கு வித்தியாசம் உள்ளதல்லவா?

கணையத்திலிருந்து சிறிது கூட இன்சுலின் ஹார்மோன் சுரக்காத நோயாளிகளுக்கு இவ்வாறு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்படுகிறது. ஆனால் கணையம் ஓரளவு வேலைசெய்து, அதன் வாயிலாக கிடைக்கின்ற இன்சுலின் ஒருவரது உடம்பில் தேவைக்குப் போதுமானதாய் இல்லாதிருந்தால், அந்தக் குறையை நிறைவு செய்வதற்கு டாக்டர்கள் சில மாத்திரைகளைக் கொடுக்கின்றனர். அந்த மாத்திரைகள் சிறிது கூடுதலான இன்சுலினைச் சுரக்குமாறு கணையத்திற்குச் சிலசமயங்களில் துாண்டுதலை அதிகரிக்கக்கூடும். ஆனால் அந்த துாண்டுதலும் தற்காலிகமானது.

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

அதாவது டாக்டர் கொடுக்கும் மாத்திரைகளை நோயாளி ஒழுங்காக சாப்பிட்டு வந்தால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் பிறகு நோயாளியின் கணையம் நன்கு சீர்பட்டு உடம்புக்கு தேவையான இன்சுலினை அது தானாகவே சுரக்குத் தொடங்கும் என்ற நிலை ஒரு நாளும் ஏற்படுவது இல்லை. அதற்கு மாறாக நோயாளி என்றைக்கு மாத்திரை சாப்பிடுகிறாரோ அன்றைக்கு மட்டும் அவரது கணையம் சற்று ஒழுங்காக வேலை செய்யும். அவர்மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் உடனே கணையமும், தன் இயக்கத்தை நிறுத்திவிடும் என்ற நிலைதான் அலோபதி மருத்துவ முறையில் இருந்துவருகிறது. கணையத்தின் செயலற்ற தன்மையை நிரந்தரமாக போக்கிவிடும் அளவுக்கு அதற்குப் புத்துயிரோ புத்துணர்ச்சியோ அளிக்கக்கூடிய ஆற்றல் அலோபதி மருத்துவத்திற்குக் கிடையாது.

நீரிழிவு நோய்க்கு யோகாசனம்

கணையத்திற்கு நிரந்தரமான புத்துயிரும், புத்துணர்ச்சியும் அளித்து, அதன் செயலற்ற தன்மையைஅறவே ஒழித்து, எந்தவிதமான மருந்தின் உதவியும் இல்லாமல் அதை மீண்டும் செயல்திறன் உடையதாய் ஆக்கி உடம்புக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அவ்வளவு இன்சுலினையும், அது தானாகவே சுரக்கச் செய்யும் ஆற்றல் சில யோகாசனப்பயிற்சிகளுக்கு இருக்கிறது.

ஆஸ்துமா, வயிற்றுக்கோளாறுகள் ஆகிய நோய்களை எளிதில்குணப்படுத்துவதற்கான சில ஆசனங்களும் உள்ளது. பொதுவாக ஜீரணக்கருவிகள் பலவீனமடைந்து விடுவதால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல், சுவாசக்குழாய், போன்ற உறுப்புகள் பலவீனம் அடைவதால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. இந்த இரு நோய்களையும் குணப்படுத்துவதற்குச் சில நோயாளிகளின் விஷயத்தில் டாக்டர்கள் பெரிதும் திணற வேண்டியதாய் உள்ளது. அப்படித் திணறியுங் கூட நோயை முழுமையும் குணப்படுத்த முடியாமல் தற்காலிகமான பரிகாரங்களோடு டாக்டர்களும், நோயாளிகளும் திருப்தி அடையும் நிலைதான் அதிகமாகக் காணப்படுகின்றன.

அதாவது வயிற்று நோய்களையும், ஆஸ்துமாவையும் நிரந்தரமாகக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் டாக்டரிடம் கிடையாது. வயிற்றுக்கோளாறுகளையாவது சில சமயங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் ஆஸ்துமாவை அப்படிக்குணப்படுத்த முடியாது.

இவ்வாறு ஆங்கில மருத்துவ முறைகளால்குணப்படுத்த இயலாத வயிற்றுக்கோளாறுகளையும், ஆஸ்துமாவையும் யோகாசனப் பயிற்சிகளால் குணப்படுத்திவிட முடியும் என்பதில் ஐயமில்லை.

yoga,meditation good for our health


yoga,meditation good for our health

யோகா பலன்கள்

வயிற்றில் ஏற்படுகிற அல்சர் எனப்படும் புண்ணைக்கூட அது மிகவும் மோசமான நிலையை எட்டியிருந்தால் ஒழிய ஆசனங்களினால் ஆற்றிவிட முடியும். ஆனால் அத்தகைய நோயாளிகள் தம் உணவுப் பழக்க வழக்கங்களினால் சில தவிர்க்க முடியாத நியதிகளைக் கடைப்பிடிக் கவேண்டும். பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் அதை ஆசனப்பயிற்சியால் குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ஆனால் அந்த உணவுக் கட்டுப்பாடுகள் எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த நோய்க்குத் தகுந்தபடி இன்ன இன்ன உணவுகளைச் சாப்பிடலாம். இன்ன இன்ன உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்ற நியதி இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, வயிற்றில் புண் உடையவர்கள் சேப்பக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும், காரமான பண்டங்களையும், உட்கொள்ளலாகாது. ஜீரண சக்தி குன்றிப்போய் வயிறு மந்தப்பட்டு இருப்பவர்கள் உணவில்நெய் சேர்த்துக்கொள்ளலாகாது . நீரிழிவு நோய் உடையவர்கள் மாம்பழம்,உருளைக்கிழங்கு போன்ற பொருள்களைச் சாப்பிடக்கூடாது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் புளிப்பான மோர், ஐஸ்கிரீம், மற்றும்குளிர்பானங்களை அருந்தக்கூடாது. இம்மாதிரியான உணவுக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுகும்போதுதான் நோய்களைக் குணப்படுத்தும் வகையில் ஆசனங்கள் பயனுள்ளவைகளாக விளங்க முடியும்.

நன்றி :டாக்டர். வீரஷத்ரியன்.

Updated On: 2 April 2023 9:53 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...