உலக தாலசீமியா நோய் தினம்...
உலக தாலசீமியா நோய் தினம்
குழந்தைகளுக்கு மட்டுமே வரக்கூடிய உயிர்க்கொல்லி நோயான தாலசீமியா மிக கொடூரமான நோயாகும். இன்று உலக தாலசீமியா நோய் தினம்.
பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவே விரும்பினாலும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமே பிள்ளைகள் பெறக்கூடிய் நோய் ஒன்று உண்டு என்றால் அது தாலசீமியாதான்.தீவிரமான மரபணுரீதியான ரத்த குறைபாடு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய்க்கு ஆளாவதில்லை, பிறவியிலேயே இந்நோய் பாதிப்புடன் தான் பிறக்கிறார்கள். உறவுக்குள் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உலகளவில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் குழந்தைகள் தாலசீமியா பாதிப்புடன் பிறக்கிறார்கள்
தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த சோகை. தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன், நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 8 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu