/* */

World Brain Tumor Day இன்று உலக மூளைக்கட்டி தினம்

World Brain Tumor Day கி.பி. 2000-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

World Brain Tumor Day இன்று உலக மூளைக்கட்டி தினம்
X

சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது.

எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

முதல் முதலாக மூளை கட்டி தினம் ஜெர்மன் மூளைக்கட்டி சங்கத்தால் (German Brain Tumor Association) அனுசரிக்கப்பட்டது.

உலக மூளை கட்டி தினமான இன்றைய நாளில் மூளை கட்டி நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக மூளைக்கட்டி என்றாலே மிகவும் பயப்படும் அளவில் தான் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நமக்கு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் மூளையில் உருவாகும் அனைத்து கட்டிகளும் மரணம் ஏற்படுத்த கூடியவை அல்ல.


மூளையில் கட்டிகள் உருவாக என்ன காரணம்..? அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும்

பல காரணங்களால் மூளையில் உருவாகும் கட்டிகளில் சில புற்றுநோய் கட்டிகளாக இருக்கும். வளர்ச்சியின் தீவிரத்தின் அடிப்படையில், கட்டிகள் தீங்கற்ற கட்டிகள் (புற்றுநோயற்ற, மெதுவான வளர்ச்சி விகிதம், குணப்படுத்தக்கூடியவை) மற்றும் வீரியம் மிக்கவை என வகைப்படுத்தப்படுகின்றன.

மூளைக்கட்டியைப் பற்றி சில உண்மைகள்

• எந்த வயதிலும் மூளைக்கட்டி ஏற்படலாம்

• மூளைக்கட்டி உருவாவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

• அளவு, வகை, இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொருத்து மூளைக்கட்டியின் அறிகுறிகள் காணப்படும்.

• பெரியவர்களுக்கு ஏற்படும் பொதுவான மூளைக்கட்டிகள் நரம்புநார்த்திசுக்கட்டி, மூளையுறை கட்டி, மூளைநரம்பு தசைக்கட்டி ஆகியவையாகும்.

• குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான மூளைக்கட்டிகள்: மச்சைகட்டி, நரம்புநார்த்திசுக்கட்டி, பல்வகைஅணுக்கட்டி, மூலவணுபுற்று.

• குடும்பத்தில் தொடர்ந்து வருவதும், அதிக எக்ஸ்-கதிர் படுதலும் ஆபத்துக் காரணிகள்.

• மருத்துவ முடிவுகள், உடல் பரிசோதனை, பல்வேறு மூளை, நரம்பு மண்டலச் சோதனைகள் மூலம் மருத்துவர் மூளைக்கட்டியைக் கண்டறிகிறார்.

• அறுவை, கதிர்வீச்சு, வேதியல்சிகிச்சை அல்லது கூட்டு மருத்துவங்களே மூளைக்கட்டிக்கு இன்றிருக்கும் மருத்துவ முறைகள்

மூளைக் கட்டிகளின் பொதுவான அறிகுறிகள்

அடிக்கடி கடுமையான தலைவலி, குமட்டலுடன் சேர்ந்த தலைவலி, நோயின் அடுத்தடுத்த கட்டத்தில் வாந்தி

* வலிப்பு அல்லது பேசுவதில் சிரமம்

* பார்வை, செவித்திறன், வாசனை, சுவை ஆகியவற்றில் சிக்கல் ஏற்படலாம்

* உடல் உறுப்புகளில் பக்கவாதம் ஏற்படுவது

* நினைவுத்திறனை இழப்பது ஒருங்கிணைப்பு குறைபாடு(coordination difficulty)

* தசை பலவீனம், நடக்கும் போது தடுமாற்றம்

கட்டிகளின் அளவு, இருப்பிடம், நிலை மற்றும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம். எனினும் எந்தவொரு அறிகுறிகளையும் ஒருவர் தொடர்ந்து அனுபவிக்க நேரிட்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

மூளை கட்டியை எப்படி கண்டறிகிறார்கள்:

* நரம்பியல் பரிசோதனைகள் (ஒருங்கிணைப்பு, பார்வை திறன், ஆடியோ / கேட்டல் திறன், பேலன்ஸ் டெஸ்ட்)

* இமேஜிங் பரிசோதனைகள்: MRI ஸ்கேன் மூலம் மொல்லயில் கட்டிகள் இருப்பதை கண்டறியலாம்.

கட்டிகளின் இருப்பை தீர்மானிக்க பல சிறப்பு MRI ஸ்கேன்கள் உள்ளன. சில நேரங்களில் MRI டெஸ்டின் போது ஒரு சாயத்தை (dye) நரம்பு வழியே செலுத்தலாம். பெர்ஃப்யூஷன் MRI, சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் கம்ப்யூட்டரைஸ்ட் டோமோ டோமோகிராபி (spect) உள்ளிட்ட பல வழிகள் மூலம் மூளை கட்டிகள் கண்டறியப்படுகின்றன.

* பயாப்ஸி: அசாதாரண திசுக்களின் மாதிரியை எடுத்து சோதித்தல்

நோயறிதலுக்கு பின் குறிப்பிட்ட கட்டி தீங்கற்றது என்று மருத்துவர்கள் கண்டறிந்தால், சில குணாதிசயங்களை பொறுத்து, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதை முழுவதுமாக அகற்றலாம் அல்லது சில நரம்புகளைப் பாதுகாக்க விட்டுவிட்டு மருந்துகளை சிகிச்சையாக மேற்கொள்ளலாம்.

அதுவே வீரியமிக்க கட்டிகளாக இருந்தால், சிகிச்சைக்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. அவை

* அறுவை சிகிச்சை

* கீமோதெரபியுடன் கதிரியக்க சிகிச்சை

* கீமோதெரபி இல்லாமல் கதிரியக்க சிகிச்சை

நோயாளிக்கு சிறந்த சிகிச்சையை வழங்க, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர், கதிரியக்க நிபுணர் மற்றும் நோயியல் நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் மேற்பார்வையில் தரப்படும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Updated On: 8 Jun 2022 10:45 AM GMT

Related News