உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்
X
இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் கண்டுபிடித்தார். ரத்த தானம் ஒரு முறை செய்வோம்-நான்கு உயிர்களை காப்போம்.

உலக இரத்தக் கொடையாளர்கள் தினம்

ரத்த தானம் ஒரு முறை செய்வோம்…. நான்கு உயிர்களை காப்போம்…!!

இரத்தத்தில் உள்ள வகைகளை முதன்முதலில் கார்ல் லான்ட்ஸ்டைனர் என்பவர் 1901ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இதன்மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. இரத்த தானம் செய்வதன்மூலம் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இரத்தத்தை பணம் பெறாமல் தானம் வழங்குபவர்கள் உள்ளனர். அவர்களை கௌரவிக்கவே உலக இரத்தக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது

ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்ததானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் முதலில் 4 முதல் 6 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 6.8 மில்லியன் மக்கள் ரத்தத்தை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வலைதளங்களில் குழுக்கள், ரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட ரத்தம் உரிய முறையில் சேமிக்கப்படுகின்றது. 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும்.

சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால், ஆண்டுதோறும் ஜூன் 14ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலக்கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இயலாமல் போனது, இரத்த பரிமாற்றத்திலும் எதிர் விளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து 1901ம் ஆண்டு காரல் லேண்ஸ்டைனர் என்பவர் இரத்ததில் உள்ள A, B, AB, O வகைகளை முதன்முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.

ஒருவர் உடலில் இருந்து 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக, நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடுசெய்யப்பட்டு விடுகிறது. ஆண்கள் வருடத்தில், 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். எனவே இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!