wheezing meaning in Tamil: ஈழைநோய் வராமல் எப்படி தடுக்கலாம்? வாங்க பாக்கலாம்

வீசிங் என்பது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை. ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
wheezing meaning in Tamil: ஈழைநோய் வராமல் எப்படி தடுக்கலாம்? வாங்க பாக்கலாம்
X

வீசிங் என்பது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை. இதனை ஈழை நோய் என்றும் கூறுவார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீசிங் பிரச்சனையினால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலருக்கு இந்த பிரச்சனை தினமும் இருந்துக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு வாரத்தில் ஒருமுறை வரும். சிலர் வீசிங் நோய்க்கு மருத்துவரின் ஆலோசனை படி இன்ஹெலர் பயன்படுத்தி வருவார்கள். வீசிங் நோயானது நள்ளிரவில் உறக்கத்தில் இருக்கும் போது கூட வரலாம். அதற்கு நாம் தான் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

மூச்சுவிடும் போது நுரையீரலில் இருந்து உருவாகும் விசில் அடிப்பது போன்ற ஒலி (இரைச்சல்) ஆகும். இது கடுமையான சுவாசக் குழாய் நோய்த் தொற்றுகள் அல்லது பிற தொற்று அல்லாத காரணங்கள் உடைய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது (ஈழை நோய்) ஆஸ்துமாவிற்கான அறிகுறியாகும்.

ஈழை நோய்க்கான அறிகுறிகளை அந்த நோய்ப்பாதிப்புக்கு உட்பட்டவர்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமாகும். அந்த நோயின் ஆரம்ப அல்லது குறைந்த அறிகுறிகளைக் கண்டறிவதன் மூலம் அதைத் தொடர்ந்து வரக்கூடிய தீவிரநிலையை ஒருவர் கட்டுப்படுத்த முடியும். மேலும் தீவிரமடையும் அறிகுறிகளையும் கண்டறியத் தவறினால் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்படலாம். இந்நோய்க்கான அறிகுறிகள் சரியாக வெளிப்படும் முன்னரே ஆரம்பநிலையில் சில மாற்றங்களை நோயாளியில் காண முடியும்.


அறிகுறிகள்

 • இரவில் இருமல் அதிகரித்தல்
 • இருமலும், மூச்சிரைப்பும்
 • சுலபமாக செய்யக்கூடிய வேலைகளின் போதுகூட களைப்பு
 • முறையற்ற தூக்கமும், எழும்பும்போது களைப்பை உணர்தலும்
 • மூக்கு ஒழுகுதல், கண்களின் அடிப்பகுதியில் கருவளையம், தோலரிப்பு போன்ற ஒவ்வாமைஅறிகுறிகள்

இவ்வகை அறிகுறிகளை கண்டுகொள்வதன் மூலம் தீவிரமான நோய்த் தாக்கத்தை தவிர்க்கலாம். இந்நோய் ஆரம்ப நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு அதிகரிக்கும்போது சுவாசக் குழாய்கள் சுருக்கமடைந்து அழற்சிக்குட்பட்டு சளியினால் நிரப்பப்படும். அப்படித் தோன்றும் அறிகுறிகளாவன:

 • நெஞ்சு இறுக்கம்
 • தீவிரமான, நீடித்த இருமல்
 • மூச்சிரைப்பு

இவற்றைக் கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடின் சுவாசக் குழாய்களில் மேலும் ஏற்படும் ஒடுக்கமானது நோயாளி சாதாரண தொழிற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். அத்துடன் சில தீவிரமான அறிகுறிகளும் தோன்றும்.

 • மூச்சிரைப்பினால் உண்டாகும் சத்தத்தை நோயாளி தானே கேட்கக் கூடியதாக இருக்கும்.
 • இரவு, பகல் தொடர்ச்சியான நீடித்த இருமல் இருக்கும்.
 • தூக்கமின்மையும், ஓய்வு கொள்ள முடியாத நிலையும் ஏற்படும்.

எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுதல் இங்கே மிகவும் அவசியமாகின்றது. அத்துடன் நோயின் தீவிரத்தை அதிகரிக்கவல்ல நிலைகளை அல்லது பொருட்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்தலும் முக்கியமாகும்.

 • நாள்பட்ட ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு வீசிங் உண்டாகும்.
 • சுவாசக் குழாய் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை அதிகமாக உண்டாகிறது.
 • நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீசிங் பிரச்சினை அதிகமாக இருக்கும்.
 • வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வீசிங் பிரச்சினை ஏற்படும்.
 • அழற்சி பிரச்சினை உள்ளவர்களுக்கு வீசிங் உண்டாகும்.
 • இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு வீசிங் பிரச்சினை உண்டாகும்.
 • உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு வீசிங் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
 • இவையெல்லாவற்றையும் விட புகைப்பிடித்தல் பழக்கம் இருப்பவர்களுக்கு வீசிங் பிரச்சினை அதிகமாக உண்டாகும்.

வீசிங் அதிகமாக மருத்துவமனைக்குச் சென்றதும் முதல் உதவியாக மருத்துவர் நெபுலைசரில் ஆக்சிஜனை செலுத்தி மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்துவார். அதன்பின் வீசிங் பிரச்சினைக்கான காரணத்தை பொறுத்து மருத்துவ சிகிச்சைகளை வழங்குவார்கள்.

ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய காரணங்களால் விசிங் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஏற்ப ஆன்டி இன்பிளமேஷன் மற்றும் ஆன்டி - பயாடிக்குகள் கொடுப்பார்கள்.

Updated On: 2 Feb 2023 3:46 PM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...