கர்ப்பிணி அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? முதலில் இதனை படியுங்கள்

கர்ப்பிணி பெண்கள் அதிகம் காபி குடித்தால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

கர்ப்பிணி அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? முதலில் இதனை படியுங்கள்
X

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என வேறுபாடின்றி காபி குடிக்கும் பழக்கம் அனைத்து தரப்பினருக்குமே இருந்து வருகிறது. காபியில், சிக்கிரி காபி, உடனடி காபி என பல வகைகள் இருந்தாலும் தற்போது பெரும்பாலானோர் உடனடி காபியே அருந்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காபியில் உள்ள சத்துக்கள், தொடர்ந்து காபி குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:


காபியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி-12 தவிர வேறு எந்த ஊட்டச்சத்துக்களும் பெரிய அளவில் கிடையாது. நூறு கிராம் காபியில் 40 மில்லி கிராம் காபைன் உள்ளது. குளுக்கோஸ் உட்கிரகத்திலைக் குறைப்பதன் மூலமும், குளுக்கோஸ் உறுப்புகளில் இருந்து வெளியாவதைத் தடுப்பதன் மூலமும், இன்சுலின் ஹார்மோன் உணர்வுத் திறனை அதிகரிப்பதன் மூலமும் நீரிழிவு நோயின் தாக்கத்தை காபி சற்று குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சைமர் நோய் என்ற நரம்பு மண்டல சம்பந்தப்பட்ட நோய்க்கு எதிராக காபி பாதுகாப்பதாகவும், அந்நோயின் சிகிச்சையிலும் காபியினைப் பயன்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்க்கின்சன்ஸ் நோய் என்ற நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஈரல் புற்றுநோய், பெருங்குடல் & மலக்குடல் புற்றுநோய், கருப்பையின் எண்டோமெட்ரியல் புற்றுநோய் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடக்குவாதம் ஏற்படும் வாய்ப்புகளை காபி குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


காபி அருந்துவது வாழ்நாளில் நீட்டிக்கின்றதா என்பது குறித்து, கிட்டத்தட்ட 14 முதல் 28 ஆண்டுகள் வரை நடைபெற்ற ஆய்வின் போது, இறப்பு சற்று தள்ளிப் போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியில் மேற்கூறிய நற்பலன்கள் இருந்தாலும் சில கெடு பலன்களும் உண்டு அது குறித்து கீழே பார்ப்போம்.

கர்ப்பிணித் தாய்மார்கள் காபியினை அளவிற்கதிகமாக அருந்தினால், குழந்தை இறந்து பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல கருக்கலைவதற்கும் வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி தாய்மார்கள் காபியினை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகையும், பிறக்கின்ற குழந்தைக்கு ரத்த சோகையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 26 April 2023 2:36 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 3. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 4. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
 5. அரசியல்
  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
 6. தமிழ்நாடு
  நடிகர் இளவரசு மீதான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
 7. இந்தியா
  Corruption Free India In Tamil ஊழற்ற இந்தியாவை உருவாகக் நாம் என்ன...
 8. இந்தியா
  இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் தலைமை தேர்தல் கமிஷனர் யார் தெரியுமா?
 9. இந்தியா
  TCAS இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? விமான விபத்து...
 10. விளையாட்டு
  Importance Of Play விளையாட்டு என்பது பள்ளி, கல்லுாரி மாணவர்களின்...