manjal kamalai symptoms in tamil: மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள்?

manjal kamalai symptoms in tamil: மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள்?
X
manjal kamalai symptoms in tamil: மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று தெரியுமா..?

manjal kamalai symptoms in tamil மஞ்சள் காமாலை இருந்தால் தோன்றும் அறிகுறிகள்

மஞ்சள் காமாலை இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். மஞ்சள் காமாலை நோய் இருப்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். நகம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தாலோ, அல்லது சிறுநீர் மஞ்சள் நிறமாக இருந்தாலோ மஞ்சள் காமாலை இருப்பதை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை இருந்தால் வேற என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மறைமுகமாக மனிதனின் உயிரையே கொள்ளகூடிய நோய்களில் ஒன்றுதான் மஞ்சள் காமாலை நோய். இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டியது, மிகவும் அவசியம். இல்லையெனில் மனிதனின் உயிருக்கே பேர் ஆபத்தை ஏற்படுத்திவிடும் இந்த மஞ்சள் காமாலை நோய்.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்:


உடலில் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அழிந்து அவை பிலிரூபின் என்ற நிறப்பொருளாக உடம்பில் உற்பத்தி ஆகிறது. இந்த பிலிரூபின் இரத்தத்தின் வழியே பித்தநீர் மூலம் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் இந்த பிலிரூபின் உடலிலேயே தங்கி விடும். இதனால், உடலிலுள்ள உறுப்புகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை என்பது அடைப்பு காமாலை மற்றும் அடைப்பில்லா காமாலை என்று 2 வகை உள்ளது. அடைப்பு காமாலை கணைய கோளாறுகள், பித்த குழாய் கற்கள் மற்றும் பித்தக்குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அடைப்பில்லா காமாலை டைபாய்டு, பாக்டீரியாக்கள் மற்றும் மலேரியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கல்லீரலை தாக்கும் பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். எந்த அறிகுறியாக இருந்தாலும் அதற்கு சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

கண்கள் மற்றும் சருமம் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும்.

வயிற்றின் வலது பகுதியிலும் அல்லது கீழ் பகுதியிலும் கடுமையான வலி ஏற்படும்.

குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் ஆகும். எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் வாந்தி ஏற்படும்.

மஞ்சள் காமாலை இருந்தால் பசி உணர்வு இருக்காது. மேலும், தலைவலி கடுமையாக இருக்கும்.

மஞ்சகாமாலை உணவு முறை

மஞ்சள் காமாலை இருந்தால் உடல் சோர்வு உடல் முழுவதும் வலி மற்றும் குடல் வீக்கம், மூட்டு வலி, இடைவிடாத காய்ச்சல், எடை இழப்பு, இரத்த கசிவு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அதிகமாக மதுபானம் அருந்துபவர்களுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

மஞ்சள் காமாலை இருந்தால் சீறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறும்.

மஞ்சள் காமாலை இருந்தால் கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியும் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மஞ்சள் காமாலை நோய் குணமாக வீட்டு வைத்தியம்:

மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.

இதற்கான சிகிச்சை முறைகள்:


இரத்த பரிசோதனைகள் மூலம் மஞ்சள் காமாலை தங்களுக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தங்களுக்கு மஞ்சள் காமாலை உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் நிச்சயமாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

வயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம்

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அதிக காரம் நிறைந்த உணவு வகைகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

அதேபோல் மஞ்சள் காமாலை வந்து 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை உட்கொள்ள கூடாது.

குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு, அதிக புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து:

இந்த மஞ்சள் காமாலை குணமாக சிறந்த மூலிகை மருந்து கீழாநெல்லி.

கீழாநெல்லி ஒரு கையளவு, சீரகம் ஒரு ஸ்பூன் இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து:

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

மஞ்சள் காமாலைக்கு மூலிகை மருந்து:

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

குறிப்பு:-

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

உடலில் உள்ள பித்தத்தை தணிக்க காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் ஆகியவரை அதிகம் சாப்பிட வேண்டும்.

மழைக்காலத்தில் நீரை கொதிக்கவைத்து அருந்த வேண்டும்.

புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!