Java Apple in Tamil-மருத்துவ குணங்கள் நிறைந்த நீர் ஆப்பிளில் இத்தனை நன்மைகளா?

Java Apple in Tamil

Java Apple in Tamil

Java Apple in Tamil-வாட்டர் ஆப்பிள் என்பது நீர் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள், ஜாம் பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நீர் ஆப்பிள் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

Java Apple in Tamil

நீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'நீர் ஆப்பிள்'. ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய நீர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியா. இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.

செல்கள் சேதத்தைத் தடுக்கும்

நீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது. மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. நீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது.

பக்கவாதத்தைத் தடுக்கும்

நீர் ஆப்பிளில், சோடியம் மற்றும் கெட்டக் கொழுப்பு குறைவாக உள்ளது. இது பக்கவாதம், தசை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு, பெருந்தமனி தடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இந்தப் பழத்தை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கலைப் போக்கும்

நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப் பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். நார்ச்சத்து நிறைந்த இப்பழம் மலச்சிக்கலை நீக்கும்.

தசைப்பிடிப்பு வலி போக்கும்

நீர் ஆப்பிளில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து தசைகளுக்கு வலிமை தரும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியைப் போக்கும். மது மற்றும் புகைப் பழக்கம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

நீர் ஆப்பிளில் வைட்டமின் 'ஏ' மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு மகப்பேறுக்குப் பின்பு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு, உடல்வலி, சோர்வு ஆகியவற்றைப் போக்கும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் ஆகியவற்றுக்கும் 'நீர் ஆப்பிள்' சிறந்த தீர்வாகும்.

வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் நீர் ஆப்பிள் பழமானது, கோவில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு ரோஜா ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில், இதனை ஜாம் பழம் என்றும் அழைக்கின்றனர். இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் இடத்தை வகிக்கிறது.

ஏனென்றால், இது சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்பு தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு பழத்திலும், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய எண்ணற்ற வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன.

* வைட்டமின் சி மற்றும் ஏ

* நியாசின்

* கால்சியம்

* பொட்டாசியம்

* மெக்னீசியம்

* பாஸ்பரஸ்

* புரதம்

* நார்ச்சத்து

இந்த பழம் எண்ணற்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது.

*மலேசியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு நீர் ஆப்பிள் மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காபி பயன்படுத்தப்படுகிறது.

* இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற உதவுகிறது.

* நீர் ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.

* அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடிய டையூரிடிக் மற்றும் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

* நீர் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவுகிறது.

* கியூபாவின் பூர்வீகத்தில், நீர் ஆப்பிள் வேரை கால்-கை வலிப்பு பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

* கொலாம்பிய மக்கள் நீர் ஆப்பிள் விதைகளை வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.

நீர் ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு ‘ஜம்போசின்’உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரையாக மாற்றிடும். நாவல் பழத்தைப் போலவே, நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம். நீர் ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவிடும். இதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும், அதாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story