vitamin e foods in tamil நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் இ உள்ள உணவுகள் என்னென்ன?

vitamin e foods in tamilநாம் உண்ணும் உணவுகளில் நமக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைப்பதில்லை. இருந்தபோதிலும் தேவையான சத்துகள் கிடைக்க சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டியுள்ளது. வைட்டமின்இ அடங்கியுள்ள உணவுகள் எவை என்பதைப் பார்ப்போமா?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
vitamin e foods in tamil நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் இ உள்ள உணவுகள் என்னென்ன?
X

வைட்டமின்  இ  சத்து நிறைந்த வேர்க்கடலை.  தினமும் சாப்பிடலாமே......


வைட்டமின் இ நிறைந்த இயற்கை தானிய வகைகள் மற்றும் காய், கனி வகைகள்.

vitamin e foods in tamil

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருமே பிறந்தது முதல் இறப்பு வரை பல நோய்களை எதிர்நோக்கி எதிர்நீ்ச்சல் போட்டு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சத்தான ஆகாரம் என்பது கனவாகி விட்டது. கலப்படங்கள் அதிகரித்ததால் எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்பதைப்போல் எதைச் சாப்பிட்டால் நமக்கு சத்து கிடைக்கும் என தேடும் நிலைக்கு நாம் அனைவருமே தள்ளப்பட்டுள்ளோம்.இயற்கையில் விளைந்த விளைபொருட்கள் குறைந்து தற்போது ரசாயன உரத்தினால் விளையும் விளைபொருட்கள் அதிகரித்துவிட்டதால் அதன்இயற்கை தன்மை கெட்டுவிட்டது. நோய்கள் வர இதுவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை வைட்டமின் இ உள்ள உணவு பொருட்கள் வழங்குகின்றன. இதனை ஆன்டி ஆக்சிஸடன்ட் நிறைந்த இந்த வைட்டமின் தோல் ஆரோக்யத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உ தவுகிறது. இந்த வைட்டமின் கொழுப்பில் கரையக்கூடிய தன்மை வாய்ந்தது என்பதால் உணவினால் தேவைக்கு அதிகமாகவே சேமிக்கப்படுகிறது.நம் உடலிலுள்ள செல்களின் வளர்ச்சிக்கும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் பெரும்பாலும் உதவுகிறது.

வேலைஎன்ன?-

நம் உடலில் வைட்டமின் ஏ, கே, இரும்புச்சத்து போன்றவற்றை உடலானது கிரகிக்கவும், சேமித்து வைக்கவும் இது உதவுகிறது. நம் உடலிலுள்ள இதய தசைகள் ஆரோக்யமாக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது வைட்டமின் இ. அழற்சி, கார்டியோவாஸ்குலர் எனும் நோய் தடுத்தல், புற்று நோய் பாதிப்பை குறைத்தல், இதய நோய், நீரிழிவு நோய்இருப்பவர்கள் வைட்டமின் இ போதுமான அளவு வைத்திருந்தால் அதனை கட்டுக்குள் வைக்க வைட்டமின் இ பயன்படுகிறது.

வேர்க்கடலை

இயற்கை தாவரங்களிலிருந்து பெறக்கூடிய உணவுகளில் இவற்றை காணலாம். வேர்க்கடலையில் மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த சிறந்த மூலம் என்று இதனை சொல்கின்றனர். வேர்க்கடலையானது இதய நோய் மற்றும் புற்று நோய்களை உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் குணம் படைத்தது. பெருங்குடல்புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஒருஸ்பூன் நிலக்கடலையில் 20 சதவீத அளவு வைட்டமின் இ நிறைந்திருக்கிறது. வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் பருமனாகாது. வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்புகளால் கெட்டகொழுப்புகள் குறைந்து உடல் எடையானது குறையும்.

சூர்ய காந்தி விதை

இயற்கையில் விளையக்கூடிய செடி வகைகளில் ஒன்று சூர்ய காந்தி. இதன் விதைகளில் வைட்டமின் இ, மெக்னீசியம், தாமிரம்,.வைட்டமின் பி1, செலினியம், முழு நார்ச்சத்து, நிறைந்தது இது. சாதாரணமாகவே மென்று இதனை சாப்பிடலாம். 100 கிராம் சூர்ய காந்தி விதையில் 35 கிராம் அளவு வைட்டமின் இ உள்ளது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக இவை சொல்லப்படுகிறது. கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க துணைபுரிகிறது. இதை சாலட் வகைகள், சூப், நொறுக்கு தீனி போன்று சாப்பிடலாம். 40 முதல் 50 கிராம்அளவே போதுமானது.

அவகோடா பழம்

இதயத்துக்கு நன்மை அளிக்ககூடிய நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுணரப்பட்டுள்ளது. உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை இது குறைக்கிறது. பொட்டாசியம் சத்துகள் ரத்தஅழுத்தத்தை சீராக வைக்க உதவுவதால் இவை இதயத்தைஆரோக்யமாக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. கார்போ ஹைட்ரேட்டுகள் மிக குறைவாக உள்ளது. நன்றாக பழுத்த பழத்தில் தினசரி அளவான 20 சதவீத வைட்டமின் இயானது கிடைத்துவிடும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின் இ மற்றும் பல ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக்கொண்டால் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ளலாம்.

ஆலிவ் ஊறுகாய்

நாம்அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சைடு டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்துகிறோம். அந்த ஊறுகாயிலும் சத்து இருக்கு பாருங்க...ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் வைட்டமின் இ உள்ளது.

உலர் மூலிகைகள்

உலர்மூலிகைகளில் அதிகமான வைட்டமின்இ உள்ளது. எனவே சாலட் , சூப் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அதன் சுவையை அதிகரிக்கவும், உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ளவும் உலர் மூலிகைகளை சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம்பருப்பு

நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் பருப்பில் வைட்டமின்இ உள்ளது. இதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவைான வைட்டமின் இ யை பெறலாம்.

கடுகுக்கீரை

கடுகுக்கீரையில் வைட்டமின் இ சத்துகள் அதிகம் உள்ளது. இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால் இதிலுள்ள முழுநன்மைகளையும் பெறலாம்.

மேலும் வைட்டமின் இ அதிகம் நிறைந்துள்ள உணவுப்பொருட்கள் என்னென்ன தெரியுமா? சோயாபீன் ஆயில், அல்மான்ட்ஸ் பீநட்ஸ், பீநட் பட்டர், பீட் க்ரீன்ஸ், பூசணி, இதுபோல் இன்னும் எண்ணற்ற உணவுகளில் வைட்டமின் இ உள்ளது. அதனைக் கண்டறிந்து நாம் தினமும் ஏதாவது ஒரு உணவினை நாம் சாப்பிடும்உணவோடு சேர்த்து உட்கொண்டால் இந்த வைட்டமின் இ யைப் பெறலாம். மேலும் வைட்டமின்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்தால் நமக்கு ஆரோக்ய பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு இடம் கொடுக்காமல் ஆரோக்யத்துக்கு தேவையான உணவுகளை மட்டும் உண்டு நோயிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்வோமாக.

Updated On: 22 Aug 2022 3:47 PM GMT

Related News