சிறுநீர் பாதை தொற்று நோயை தடுப்பது எப்படி?

Urinary Tract Infection in Tamil
X

Urinary Tract Infection in Tamil

Urinary Tract Infection in Tamil-சிறுநீர் பாதை தொற்று நோயை தடுக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

Urinary Tract Infection in Tamil-சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள், மாற்றிக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த சிறுநீர் நோய் தொற்று ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. ஐந்தில் ஒரு பெண், ஒருமுறையாவது இந்த சிறுநீர் பாதை நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுகிறார். பெரும்பாலும் இந்நோய் பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது.

​​சிறுநீரகப் பாதை நோய் தொற்று

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள். சிறுநீரக பாதை நோய் தொற்று என்பது சிறுநீர் குழாய்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் குழாய் உட்பட எந்த ஒரு பகுதியையும் பாதிக்கலாம். இது ஒரு பாக்டீரியா நோய்த் தொற்று என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பூஞ்சை மற்றும் வைரஸ்களும் இந்த தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்.

தோல், மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை அல்லது சிறுநீர் குழாய்க்குள் நுழைந்து அங்குள்ள உறுப்புகளை பாதிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் நோய் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர் வெளியேறும் பகுதியில் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது.

​சிறுநீர் பாதை நோய் தொற்று அறிகுறிகள்

சிறுநீர் நிறம் மாறுதல், அதிக சோர்வு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், அடிவயிறு தசைப்பிடிப்பு, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம், சிறிதளவு சிறுநீர் வெளியேறுதல்.

​சிறுநீரக நோய் பற்றிய அறிகுறிகள்

​சிறுநீர்ப் பாதையில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அதிக காய்ச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு அல்லது குமட்டல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், அதிக குளிர் மற்றும் நடுக்கம் போன்றவை தென்படலாம். சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல், அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல் போன்றவை சிறுநீர் குழாய் நோய் தொற்று சில அறிகுறிகள் ஆகும்.

தடுப்பு வழிகள்

தினசரி குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3.5 லிட்டர் வரை தண்ணீர் அருந்துதல். சிறுநீரை அடக்குதல் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே சிறுநீர் கழிப்பதை அடக்கக் கூடாது. அவசர அவசரமாக சிறுநீர் கழிக்கக் கூடாது. இதன் காரணமாக சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாவது தடுக்கப்படலாம்.பிறப்புறுப்பு பகுதியில் ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க கூடாது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பிறப்புறுப்பு பகுதியை பராமரிக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல். புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

சில வீட்டு முறை வைத்தியங்கள் நோய் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டாலும், சில வீட்டு முறை வைத்தியங்கள் மூலம் இதன் அறிகுறிகளை சரி செய்ய முடியும்.

​நீர்ச்சத்து

இது போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அதிக அளவு தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள், அதிகளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் இந்நோயிலிருந்து குணமடைய முடியும். தினசரி 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பானங்கள்

இளநீர், எலுமிச்சை சாறு அல்லது கரும்புச் சாறு போன்றவை சிறுநீரிலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்களை அதிகளவில் அருந்தலாம். இளநீர், எலுமிச்சை போன்றவற்றில் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. காலை வேளைகளில் இதை அருந்துவது சிறந்தது.

கஞ்சி

​சாதத்தை வடிப்பதில் இருந்து கிடைக்கும் கஞ்சியில் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே இது சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மீண்டும் வருவதை தடுக்கும் என கூறப்படுகிறது.

​குதிரைவாலி

பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் குதிரைவாலி போன்ற அரிசி வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரக பாதை நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

​வாழ்க்கை முறை மாற்றங்கள்

சுகாதாரத்தை பராமரிக்க சிறுநீர் கழிப்பதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவுதல். சுத்தமான உள்ளாடைகளை அணியுங்கள். வேலை செய்யும் போது, சிறுநீர்க்குழாய் பகுதியைச் சுற்றி அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தாத பொருத்தமான ஆடைகளைப் பயன்படுத்தவும். உடற்பயிற்சி செய்த பிறகு குளித்துவிட்டு பிறப்புறுப்பு பகுதியை நன்றாக துடைக்கவும்.

எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன், டாக்டரை கலந்து ஆலோசிக்கவும். நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுக்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai marketing future