முதுகுவலி வராமல் இருக்க... இதையெல்லாம் நீங்கள் செய்ய கூடாது

உடல்சார்ந்த பல பிரச்னைகளில் மிக முக்கியமானது முதுகுவலி. அந்த முதுகுவலி என்ன காரணங்களால் வருகிறது என தெரிந்துவிட்டால், அது வராமல் நம்மால் தடுக்கவும் முடியும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முதுகுவலி வராமல் இருக்க... இதையெல்லாம் நீங்கள் செய்ய கூடாது
X

முதுகுவலியால் அவதிப்படுவோர், இனிமேல் இந்த டிப்ஸ்- ஐ பாலோ பண்ணுங்க... 

இனிமேல் முதுகுவலியால் அவதிப்படலாமா நீங்க...?


உட்கார்ந்த நிலையில், நீண்டநேரம் வேலை செய்வதாலும், உடலியக்கம் குறைவதன் காரணமாகவும் இன்று முதுகு வலியால் அவதிப்படுவோர் ஏராளம் பேர் உள்ளனர். இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதுகு வலி என்பது, ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது.


அதிலும் இப்போது பெரும்பாலான அலுவலகங்களில், ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலக இருக்கை சூழல் இல்லாததாலும், கூடுதலாக பல மணி நேரம் வேலை செய்வதாலும் முதுகு வலி ஏற்படுவதாக ஐடி ஊழியர்கள் கூறுகின்றனர்.


முதுகு வலி வராமல் தடுக்க, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்

செய்ய வேண்டியவை:

நாற்காலியில் முன்னோக்கி குனிந்து உட்காரும்போதும், பின்பக்கம் சாய்ந்து உட்காரும்போதும் இடுப்பு முதுகெலும்பு வளைந்து இடுப்பு மூட்டுகளில் அதிக அழுத்தம் கொடுக்கிறது இதனால் முதுகுவலி ஏற்படுகிறது. நாற்காலியில் இருந்தால், நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். உட்காரும் போது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். உட்காரும் போது முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்பட்டால் ஒரு டவல் அல்லது குஷன் வைத்துக்கொண்டு அமர வேண்டும்.


உட்கார்ந்த நிலையில், நீண்டநேரம் வேலை செய்வதாலும், உடலியக்கம் குறைவதன் காரணமாகவும் இன்று முதுகு வலியால் அவதிப்படுவோர் ஏராளம் பேர் உள்ளனர். இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதுகு வலி என்பது, ஒரு பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது.

அதுபோல கால்களை தொங்க விடக்கூடாது இருக்கையின் உயரத்தை சரி செய்ய முடியவில்லை எனில், காலுக்கு ஒரு பெஞ்சை பயன்படுத்தலாம். நீண்ட நேரம் தொடர்ந்து உட்காருவது முதுகு வலியை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் இயக்கமின்றி இருப்பதால், வழக்கமான உடல் அசைவுகள் இல்லாததால் உடல் தசைகள் சுருங்கி இருக்கும். எனவே, ஒவ்வொரு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை உடலை அசைத்து கொடுக்கவேண்டும். முடிந்தவரை எழுந்து நடக்கவேண்டும். ஓரிரு நிமிடங்கள் உடலை வளைத்து நெளித்து நீட்ட வேண்டும்.


அலுவலக வேலையில் மூழ்கி விட்டால், சிலர் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுவார்கள். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்வோர், கண்டிப்பாக தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். உடலை முன்னோக்கி வளைத்து, கால்களை தொடுதல்; உடலை பின் நோக்கி வளைத்தல் உள்ளிட்டவைகளை தினமும் செய்துவர வேண்டும். முதுகுக்கு பயிற்சி தர வேண்டும்.

செய்யக்கூடாதவை:

வீட்டில் கணினியில் வேலை செய்வோர், கட்டிலில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது இது கண்டிப்பாக முதுகு பிரச்சனையை ஏற்படுத்தும். தரையில் அமர்ந்து வேலை செய்வதும் தவிர்த்துவிடலாம் ஏனெனில் கண்டிப்பாக முதுகு வளையும்.

சரியான நாற்காலியில் அமர்ந்து, சரியான உயரத்தில் மேஜையில் கணினியை வைத்து பயன்படுத்த வேண்டும். முதுகை வளைத்துக் கொண்டு, குனிந்தபடி வேலை செய்வதையும், அதிகமான உயரத்தில் கணினி வைத்து, தோளை உயர்த்தி, வேலை செய்வதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.


டூவீலர்களில் அதிக நேரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்; உங்கள் உயரம், எடைக்கு ஏற்ப டூவீலர்களை தேர்வு செய்ய வேண்டும். டூவீலர்களில், சவுகரியமான முறையில், அதன் கைபிடிகளை அமைத்திருப்பது முக்கியம். முன்னோக்கி குனிந்தபடி வாகனத்தை ஓட்டக்கூடாது. அதேபோல், கார்களிலும் அமரும் இருக்கைகளில், முதுகு வளையாமல் நேராக இருப்பது அவசியம்.

நீண்டநாட்களாக முதுகுவலியால் நீங்கள் அவதிப்படும் பட்சத்தில், டாக்டரை அணுகி சரியான சிகிச்சை பெற வேண்டும்.

Updated On: 19 Aug 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    வேளாங்கண்ணி மாதா கோயில்: பக்தி, அதிசயம், கடற்கரை
  2. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  4. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  5. சுற்றுலா
    திருவண்ணாமலை கோவில் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள
  6. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  9. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக