ஆண்களுக்கு பிரசவ வலி தரும் வேதனை இதுதாங்க....

Kidney Stones Pain -பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலியை கடந்து வருவது, 'மறுபிறப்பு' என்பார்கள். அதுபோன்ற ஒரு கொடுமையான வலியை ஆண்களுக்கு தருவது, சிறுநீரக கற்கள் தான்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்களுக்கு பிரசவ வலி தரும் வேதனை இதுதாங்க....
X

ஆண்களுக்கு, சிறுநீரக கற்கள் உருவாகி விட்டால், அது ஏற்படுத்தும் வலியை, அந்த வேதனையை வார்த்தைகளில் கூறி விட முடியாது. அதை தவிர்க்க, இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

Kidney Stones Pain -சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் உருவாகும் கடினமான கனிம உப்பு. இது சிறுநீர் பாதை வழியாக செல்லும்போது, பிரசவ வலியை போன்ற மிக கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. சிறுநீரக கற்களை தடுக்க, இதுதான் உறுதியான வழி என்று இல்லை. குறிப்பாக குடும்ப வரலாறு இருந்தால், இதை தடுப்பது கடினமானது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில மருந்துகளின் கலவை காரணமாக 'கிட்னி ஸ்டோன்' அதாவது சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்தை குறைக்க உதவும். சிறுநீரக கற்களை தடுக்க உதவும் குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.


நிறைய தண்ணீர் குடியுங்கள்

சிறுநீரக கற்களை தடுக்க, அதிக தண்ணீர் குடிப்பது முக்கியம். போதுமான அளவு தண்னீர் குடிக்கவில்லை என்றால், சிறுநீர் வெளிவருவது குறைவாக இருக்கும். இது அதிக செறிவூட்டப்பட்டு கற்களை உண்டாக்கும். சிறுநீரின் உப்புகளை கரைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்க செய்யும்.

நீரில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு கலந்து குடிப்பது மிக நல்லது. இவை இரண்டிலும் சிட்ரேட் உள்ளது என்பதால், கற்கள் உருவாவதை தடுக்கலாம். தினமும் 8 டம்ளர் திரவங்களை குடிக்கலாம். இரண்டு லிட்டர் சிறுநீர் கழிக்க, இது போதுமானது. உடற்பயிற்சி செய்தால் அல்லது அதிக வியர்வை எடுத்தால், இன்னும் கூடுதலாக, தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் தெளிவாக, மஞ்சள் நிறமாக இருந்தால், ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அடர்ந்து, வலுவாக இருந்தால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


கால்சியம் நிறைந்த உணவுகள்

கால்சியம் நிறைந்த உணவுகள், எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரக கல்லின் பொதுவான வகை, கால்சியம் ஆக்சலேட் கல் ஆகும். இது கால்சியம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்க வைக்கிறது. ஆனால் குறைந்த கால்சியம் உணவுகள், சிறுநீரக கல் அபாயத்தையும், 'ஆஸ்டியோபோராசிஸ்' அபாயத்தையும் அதிகரிக்கலாம். கால்சியம் சப்ளிமெண்ட் கற்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். உணவுடன் கால்சியம் எடுத்துகொள்வது ஆபத்தை குறைக்கும். குறைந்த கொழுப்பு உள்ள பால், குறைந்த கொழுப்பு உள்ள பாலாடைக்கட்டி மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள தயிர் போன்றவை சேர்க்கலாம்.


சோடியம் குறைவாக சாப்பிடுங்கள்

அதிக உப்பு கலந்த உணவு, கால்சியம் அபாயத்தை அதிகரிக்கிறது. யூராலஜி கேர் பவுண்டேஷனின் கூற்றுப்படி, சிறுநீரில் அதிக உப்பு, கால்சியம் சிறுநீரில் இருந்து இரத்தத்துக்கு மீண்டும் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. இது சிறுநீரில், அதிக கால்சியத்தை உண்டு செய்கிறது இதனால் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும்.

உப்பு குறைவாக சேர்த்தால் கால்சியம் அளவை குறைக்க உதவுகிறது. சிறுநீரில் கால்சியம் குறைவாக இருந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் குறைவு. சோடியம் அதிகம் உள்ள உணவுகள் சிப்ஸ்கள், பதப்படுத்தப்பட்ட சூப்புகள், காய்கறிகள், இறைச்சி, சுவையூட்டிகள், மோனோசோடியம் குளுட்டமெட் கொண்ட உணவுகள், சோடியம் நைட்ரேட் கொண்ட உணவுகள், சோடியம் பை- கார்பனேட் உணவுகள் போன்றவை, கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.


வைட்டமின் சி சப்ளிமெண்ட் குறையுங்கள்

வைட்டமின் சி சப்ளிமெண்டாக எடுக்கும் போது, அது சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஆண்கள், வைட்டமின் சி உணவாக எடுப்பதே நல்லது. 2013 ம் ஆண்டின் ஆய்வின் படி அதிக அளவு வைட்டமின் சி சப்ளிமெண்ட் எடுக்கும்போது, ஆண்கள் சிறுநீரக கல் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றனர்.

ஆக்சலேட் நிறைந்த உணவுகள்

சில சிறுநீரக கற்கள், ஆக்சலேட்டால் ஆனவை. இது சிறுநீரில் கால்சியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கற்களை உருவாக்கும் உணவுகளில் காணப்படும் இயற்கை கலவை இது.

கீரைகள், சாக்லேட், இனிப்பு உருளைக்கிழங்கு, காபி, பீட்ரூட், வேர்க்கடலை, சோயா பொருள்கள், கோதுமை தவிடு ஆக்சலேட் மற்றும் கால்சியம் சிறுநீரகங்களை அடைவதற்கு முன்பு செரிமான மண்டலத்தில் ஒன்றாக பிணைக்கப்படுகின்றன. அதனால் அதிக ஆக்சலேட் உணவுகள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை, ஒரே நேரத்தில் சாப்பிட்டால் கற்கள் உருவாவது கடினம்.

எனவே, இந்த வழிமுறைகளை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம். அது தரும் கொடூர வலியில் இருந்தும் தப்பிக்கலாம்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Nov 2022 6:40 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
 2. நாமக்கல்
  காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
 3. தமிழ்நாடு
  ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
 4. தொழில்நுட்பம்
  Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
 5. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...
 6. டாக்டர் சார்
  Pani Vedippu குளிர்காலங்களில் ஏற்படும் பாத வெடிப்புகளைப் போக்க...
 7. ஈரோடு
  Vel Pray Song Release சென்னிமலையில் இருந்து பழனிக்கு ஜன., 1ம் தேதி...
 8. ஈரோடு
  Chennai Storm Flood Relief Work பவானி நகராட்சி 15 தூய்மை ...
 9. தஞ்சாவூர்
  தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு
 10. கும்மிடிப்பூண்டி
  பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு..! கரையோர மக்களுக்கு...