/* */

ரத்தசோகை வராம தடுக்கணுமா? இந்த வகை உணவுகளை அதிகமா சாப்பிடுங்க!

உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில் அவை இரத்த சோகை, ஹீமோகுளோபின் பற்றாக்குறை பிரச்னைகளை உருவாக்கும்.

HIGHLIGHTS

ரத்தசோகை வராம தடுக்கணுமா?  இந்த வகை உணவுகளை அதிகமா சாப்பிடுங்க!
X

ரத்தசோகை நோய் வராம தடுக்க, ரொம்ப கவனமா சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்க... 

தினசரி வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு மோசமான உடல் சோர்வை ஏற்படுத்துவது, இரத்த சோகை. உடலில் ஹீமோகுளோபின் அளவும் குறையும் போது சரியான மருத்துவ சிகிச்சையும், உடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளும் இதிலிருந்து விரைவில் மீள வழி வகுக்கும். அப்படியான உணவுகளை பற்றி பார்க்கலாம்.

ரத்தத்தில் போதிய அளவு சிவப்பணுக்கள் இல்லை என்பதன் அறிகுறிதான் அனீமியா. அனீமியா எனப்படும் ரத்த சோகை வந்தால், உடல் சோர்வடைந்து விடும். வறட்சியாக, தோல் சுருங்கி போய் விடும். மூச்சு விடுவது சிரமமாக இருக்கும். தினசரி வேலைகளில் கவனம் செலுத்துவது கடினம். இவை அனீமியாவின் பாதிப்புகள்.

உடலில் போதிய அளவு இரும்பு சத்து இல்லாமல் போவதே இதற்கு காரணம். இதை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம்.

​கீரை வகைகள்:


தினமும் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டும். கீரைகளில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் கே, பி ஆகியவை உள்ளன. இது உடலில், இரும்பு சத்தை அதிகரிக்கும். வைட்டமின் சி கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தினமும் ஒரு கீரையை, பொரியலாகவோ கூட்டாகவோ குழம்பாகவோ சாப்பிடலாம்.

இறைச்சி வகைகள்:

இறைச்சியில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. குறிப்பாக ஈரல், சிறுநீரகம், மூளை, இதயம் ஆகியவற்றில் வைட்டமின் பி, காப்பர், செலினியம் ஆகியவை அதிகமாக உள்ளது. இதில் போதுமான அளவு இரும்புச் சத்தும், குறைந்த அளவில் நார்ச்சத்தும் உள்ளது. இது அனீமியாவை குணப்படுத்த உதவும்.

பீன்ஸ் வகைகள்:

பீன்ஸ் வகைகள் அனைத்தும், மருத்துவ குணம் கொண்ட உணவுகள். அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. குறிப்பாக மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை அதிகம். நமது உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் இவை தருகிறது. பீன்ஸ் வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். அசைவம் சேர்க்காதவர்கள் சைவ உணவில் முழுமையான சத்தை பெறுவதற்கு பீன்ஸ் வகைகள் அவசியம்.

​உலர் பருப்பு வகைகள்:


பேரீச்சம் பழம், உலர் திராட்சை, வால்நட்ஸ், பாதாம் போன்ற பருப்புகள் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு,மெக்னீசியம் ஆகிய சத்துக்களைக் கொடுக்க உதவுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அனீமியாவை போக்கும். ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்யும்.

தினமும் 4 பாதாமை ஊறவைத்து தோலுரித்து எடுக்கலாம். வால்நட், உலர்திராட்சை, பேரீச்சம்பழம் அனைத்தையும் சேர்த்து பொடியாக்கி பாலில் கலந்தும் குடிக்கலாம். வேகமாக இரத்த சோகை பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரும்.

​இரத்த சோகை குணமாக்கும் விதைகள்:

பூசணி, எள்ளு போன்ற விதைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. மேலும் புரோட்டின், நா்ச்சத்து, கால்சியம்,மெக்னீசியம், ஜிங்க், செலினியம் உள்ளிட்டவையும் இதில் அதிகமாக உள்ளது. இதில் ஓமேகா 3, ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த வகை விதைகள் பல விதங்களிலும் நமக்கு பலன் தரக் கூடியவையாகும். தினமும் 4 பூச்ணிவிதைகள் எடுக்கலாம். எள்ளு கேக், எள்ளு பொடி, எள்ளுத்துவையல், எள்ளு உருண்டை என்றும் செய்து சாப்பிடலாம். இவற்றுடன் மற்ற விதைகளையும் சேர்த்து வெல்லம் கலந்து உருண்டை பிடித்து தினமும் ஒன்று சாப்பிடலாம். சாலட் மீது தூவி எடுக்கலாம்.

​இரத்த சோகை குணமாக்கும் ப்ரக்கோலி:

அனீமியா, ஹீமோகுளோபின் பிரச்சினை உள்ளவர்களுக்கு அடர்ந்த பச்சை நிற காய்கறிகள் உதவும். அந்த வகையில் ப்ரக்கோலியை அதிகமாக சேர்க்கலாம். இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அவ்வபோது சாப்பிடலாம். புற்றுநோயைத் தடுக்கும் சக்தியும் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ப்ரக்கோலியை க்ரேவியாகவோ ஆவியில் வேக வைத்தோடு எடுப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து சேர்க்க கூடாது.

​இரத்த சோகை குணமாக்கும் மீன்:


அசைவ விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த மீனில், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மேலும் இதில் இரும்புச் சத்து அதிகம். இது மூளைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிக முக்கியமானது. சால்மன் மீன், மத்தி மீன் போன்றவற்றை அதிகம் சேர்த்து வரலாம். ஆனால் மீனை வறுத்து எடுக்காமல், குழம்பு மீனாக சாப்பிடுவதே சிறந்தது.

உடல் நலமும், ஆரோக்கியமுமே பிரதானம் என்பதால், ரத்த சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் பற்றாக்குறை உள்ளவர்கள் மட்டுமின்றி, இந்த வகை பாதிப்புகளை தவிர்க்க விரும்பும் நாம் அனைவருமே, இந்த உணவு முறையை பின்பற்றி சாப்பிட வேண்டும். உடல்நல பாதிப்புகளை, வருமுன் தடுக்க நல்லா சாப்பிடுவதை விட, நல்லதையே சாப்பிடுவதுதான் மிக முக்கியம்.

Updated On: 5 Aug 2022 4:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்