AI உதவியுடன் Superbug ஆண்டிபயாடிக்! ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
நிமோனியாவை உண்டாக்கும் 'சூப்பர்பக்' என்ற கொடிய பாக்டீரியாக்களைக் கொல்லக்கூடிய புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு AI உதவுகிறது. இது மிகப் பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதன் அடிப்படையில் பெரிய பெரிய நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னடிய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் காயங்களின் மூலம் தொற்றி நிமோனியாவை ஏற்படுத்தக்கூடிய 'சூப்பர்பக்' என்ற கொடிய இனத்தைக் கொல்லும் புதிய ஆண்டிபயாடிக் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக அச்சுறுத்தும் மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் புதிய வகை ஆண்டிபயாடிக் கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூப்பர்பக் நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் தோலில் நுண்ணுயிர் எதிர்ப்பியை அவர்கள் பரிசோதித்தபோது, அது பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதைக் கண்டறிந்துள்ளனர். மற்ற மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு வடிவமைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்க இந்த முறையைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
ஆண்டிபயாடிக்-எதிர்ப்பு அசினெட்டோபாக்டர் பாமன்னியின் 41 வெவ்வேறு விகாரங்களுக்கு எதிராகவும் ஆராய்ச்சியாளர்கள் ஆண்டிபயாடிக் சோதனை செய்தனர். இந்த மருந்து அவை அனைத்திலும் வேலை செய்ததை தெரிந்துகொண்டுள்ளனர், இருப்பினும் இது நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு மனித மருத்துவ பரிசோதனைகளில் மேலும் சுத்திகரிக்கப்பட்டு சோதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெர்ல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உதவிப் பேராசிரியரான டாக்டர் சீசர் டி லா ஃப்யூன்டே என்பவர், புதிய சிகிச்சைகளைக் கண்டறிய AI ஐப் பயன்படுத்துகிறார், ஆனால் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை, ஆராய்ச்சியாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்து வருகின்றனர். இது ஒரு வளர்ந்து வரும் துறையாகும். இது ஆயிரக்கணக்கான நம்பிக்கைக்குரிய கலவைகளை வரிசைப்படுத்த எடுக்கும் நேரத்தை வியத்தகு முறையில் குறைக்கிறது. இந்த துறையில் மட்டுமின்றி AI ஐ பல களங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ள அவர், மேலும் மருந்து கண்டுபிடிப்பு அடுத்த எல்லைக்கு விரிவடைகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu