சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள் எது தெரியுமா? ... .. படிச்சு பாருங்களேன்....

sugar patient food list in tamil மனிதர்களுக்கு ஏற்படும் நோய் வகைளில் இன்று பிரதான இடத்தினைப் பெற்றிருப்பது சர்க்கரை நோயே. இதனால் பாதிப்படைந்தவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள்  எது தெரியுமா? ... .. படிச்சு பாருங்களேன்....
X

sugar patient food list in tamilsugar patient food list in tamil

நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து கொழுப்புச்சத்து கார்போஹைட்ரேட், ஆகிய மூவகைச்சத்துகளும் உள்ளன. அவற்றை நம்உடலில் உள்ள ஜூரண உறுப்புகள் , தாங்கள் சுரக்கும் ஜூரண நீர்களால் ஜூரணித்துவிடுகின்றன. கார்போஹைட்ரேட் எனும் சத்து, நாம் உட்கொள்ளும் மாவு, கிழங்கு வகைகள், அரிசி, ரொட்டி போன்ற உணவு வகைகளில் அதிகம் உள்ளன. இவைதாம் ஜூரணத்தின் போது பல்வேறு சர்க்கரைகளாக மாற்றப்பட்டு நமக்கு வேண்டிய சக்தியை அளிக்கின்றன.

இந்த சர்க்கரை, முக்கியமாக 'குளுக்கோஸ்' என்னும் சர்க்கரை ,இன்சுலின் உதவியோடு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. அதோடல்லாமல் இக்குளுக்கோஸ் சர்க்கரை நம்முடலுக்கும் பல்வேறு உறுப்புகளுக்கும் சக்தியினை அளிக்கிறது. ரத்தத்தோடு கலந்து மூளைக்குச் சென்று நன்கு யோசனை செய்யவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.

இந்த சர்க்கரை கூரிய கண்பார்வைக்கும் நம் உடலிலுள்ள தசைகளுக்கு வேலை செய்யும் திறனையும் அளிக்கிறது. உதாரணத்தோடு சொல்லப்போனால் நம் உடலினை ஓர் இயந்திரமாக எடுத்துக்கொள்வோமானால் கல்லீரல்தான் அதன் சக்திநிலையம் என்று கொள்ள வேண்டும். ஏனென்றால் இங்குதான் குளுக்கோஸ் சர்க்கரை சேமித்துவைக்கப்படுகிறது. இந்த குளுக்கோஸ் சர்க்கரையினைச் சக்தியாக மாற்ற ஒரு துாண்டுகோல் அல்லது தீப்பொறிதான்இன்சுலின்எனலாம்.

கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் ஒரே சீராக ஒரே அளவில் தான் சுரக்குமா? இல்லை. நாம் உணவு உண்ட சில நிமிடங்களில் கணையத்திற்குச் செய்தி சென்றுவிடும். இம்மனிதர் சர்க்கரை மிகுந்த பொருட்களை உண்டு இருக்கிறார். அதற்கு தேவையான இன்சுலினைச் சுரந்து அச்சர்க்கரையினைப் பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்பி விடுங்கள் என்றும், கல்லீரலில் சேகரித்து வையுங்கள் என்றும் கம்பி இல்லாத தந்தி போலச்செய்தி கிடைத்துவிடும்.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரைப் பொருட்களை இன்சுலின், நான்இப்போதுசொல்லியபடி, மாற்றியமைத்து நம் ரத்தத்தில் குளுக்கோஸினை ஒருசீரான அளவில் வைத்துள்ளது. இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் கோளாறுகளால் சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு ரத்தத்தில் அதிகமான அளவு சர்க்கரைஇருக்கும்.

இந்த அதிகமான அளவு சர்க்கரை உடலில் சேமித்து வைக்கப்படுவதற்கும் மேலாக இருக்கும் பட்சத்தில் அது சிறுநீரில் வெளியேறும். அவ்வாறு சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையைப் பொருத்தே சர்க்கரை நோயினை நிர்ணயிக்க முடியும்.

sugar patient food list in tamil


sugar patient food list in tamil

சாப்பிடக்கூடாதது

குளுக்கோஸ், ஜாம், தேன், சர்க்கரை, அல்லது வெல்லப்பாகு , சாக்லேட், இனிப்பு வகைகள், கேக்குகள், இனிப்பு ரொட்டிகள், இனிப்பான அடைகள், அப்பம் போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம்

கனி வகை

வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, சப்போட்டா, போன்ற பழங்களும், உலர்ந்த பழங்களும் உலர்ந்த திராட்சையும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாது.இனிப்பான பழரசங்களையும், மசியல்களையும் இந்நோயாளிகள் நாடக்கூடாது.

காய்கறி

உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணி வகைகள், கொட்டைகளுள் முந்திரிக்கொட்டை கடலைக்கொட்டை போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டும்.

பான வகைகளுள் கோலாபானங்கள், ஹார்லிக்ஸ், பூஸ்ட்,போர்ன்விட்டா, காம்ப்ளான், ஆகியவற்றையும் உணவில் சேர்த்தல்கூடாது.

வறுத்த உணவுகளான பூரி, பரோட்டா, பக்கோடா, சமோசா, போன்றவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது . வறுத்த உணவுப்பொருட்கள் பருத்த சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாதவை .

ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய், டால்டா, இவையனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு விரோதிகள்.எருமைப்பால் இனிப்பூட்டப்பட்ட அடர்பால், பால்கோவா, போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாப்பிடக்கூடியவை எது?

சர்க்கரை நோயாளிகள் எதைஎதைச் சாப்பிட தடையில்லை என்பது பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆகிய காய்கறிகளைத் தவிர மற்ற காய்கறிகளை நிறைய சாப்பிடச் சொல்லலாம். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, தக்காளி, வெள்ளரிக்காய், கீரை வகைகள் எல்லாவற்றையும் நிறைய சாப்பிடலாம்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால் கோழிக்கறி, முட்டை, மீன், ஆட்டிறைச்சி, போன்றவற்றை குறிப்பிட்ட அளவில் சாப்பிடலாம்.

கொழுப்பெடுக்கப்பட்ட பாலால் தயாரிக்கப்பட்ட காபி, தேநீர், மிளகுரசம், மோர், எலுமிச்சைப்பழச்சாறு, போன்ற பானங்களைச் சாப்பிடலாம்.மதுபானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை கோதுமையால் செய்யப்பட்டஉணவினை உண்ணலாம்.

காபி, டீ, போன்ற பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக சர்க்கரை நோயாளிகளுக்கு என்று தயாரிக்கப்பட்ட இனிப்பு நீரை உபயோகிக்கலாம்.

sugar patient food list in tamil


சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு (பைல்படம்)

குறிப்பிட்டஅளவு உண்ண வேண்டியவை

பழங்களில் கொய்யா, ஆரஞ்சு,பப்பாளி, சாத்துக்குடி,போன்றவற்றை ஒரு நாளைக்கு சில துண்டுகளை சாப்பிட அனுமதிக்கலாம். நிலக்கடலை, முந்திரி போன்றவற்றையும் எப்போதாவது சிறிது சாப்பிடலாம்.

காய்கறியில் பச்சைப்பட்டாணி, பீன்ஸ், கேரட், போன்றவற்றையும் குறிப்பிட்ட அளவு உண்ணலாம்.

சர்க்கரை நோயாளரிகளின் உணவு முறையில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது உணவிற்கு இடையிலள்ள இடைவெளியே ஆகும். முடிந்த அளவிற்கு மூன்று வேளை நாம் உண்ணும் உணவிற்கு இடைப்பட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு உண்ணும் உணவுகளில் ஏதேனும் சிறியதாக சாப்பிடலாம்.

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கானமாதிரி உணவு முறை....

காலை 8-9 மணிக்கு : 3 இட்லி அல்லது சிறிதளவே எண்ணணெய் விடப்பட்ட தோசை, சாம்பார், சட்னி, சர்க்கரையில்லாத ஒருகோப்பை காபி அல்லது டீ.

10 மணிக்கு: மோர் அல்லது தக்காளிச் சாறு அல்லது எலுமிச்சைச்சாறு ஒரு கோப்பை அல்லது ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிக்காய்.

பகல் 1.30மணிக்கு: இரண்டு கோப்பை சாதம், சாம்பார், ரசம், காய்கறி, கீரைவகைகள், ஒருகோப்பை தயிர், மோர், பச்சைப்பயிறு அல்லது ஒரு கோப்பை கொத்துக் கடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

மாலை 4 மணிக்கு: சர்க்கரை இல்லாத ஒரு கோப்பை காபி, அல்லது டீ. இரண்டு வடை அல்லது போண்டா அல்லது வறுத்த பொட்டுக்கடலை அல்லது 2 ஸ்லைஸ் ரொட்டித்துண்டு அல்லது 2 ரஸ்க் ரொட்டி.

இரவு : மதிய உணவைப்போலவே கொடுக்கவேண்டும்

படுக்கைக்கு போகும் முன் சர்க்கரை இல்லாத ஒரு கோப்பை கொழுப்பெடுக்கப்பட்ட பால். இம்மாதி உணவினைத் தயாரிக்க நான்கு தேக்கரண்டி சூர்யகாந்தி எண்ணையையோ நல்லெண்ணையையோ உபயோகப்படுத்தலாம்.

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு:

பகல் உணவிலும் இரவு உணவிலும் கோழி அல்லது மீனைத் தினமும் 200கிராம் சேர்த்துக்கொள்ளலாம். ஆட்டிறைச்சி 100கிராம் அல்லது வாரமொருமுட்டையினையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்றவை சைவ உணவைப் போலவேதான்.

மிகவும் உண்டு பருத்துள்ள அதிக உடல் எடையுள்ள குண்டான நோயாளிகளுக்கு மாதிரி உணவு முறை-2

காலை 7மணி: சர்க்கரையில்லாத ஒரு கோப்பை காபிஅல்லது டீ.

காலை 9மணி: 2 இட்லி அல்லது தோசை அல்லது ஒருகோப்பை பொங்கல், சட்னி, சாம்பார், சர்க்கரைஇல்லாத ஒரு கோப்பை காபி, அல்லது டீ.

காலை 11 மணி: ஒரு கோப்பை மோர் அல்லது எலுமிச்சை சாறு அல்லது தக்காளிச் சாறு அல்லது ஒன்றிரண்டு வெள்ளரிக்காய்.

பகல் 2 மணிக்கு : ஒருகோப்பை சாதம், சாம்பார், ரசம்,கூட்டு காய்கறிகள், கீரை,மோர், ஒரு கோப்பை பச்சைப்பயறு, அல்லது கொத்துக்கடலை, அல்லதுசுண்டல்.

மாலை 5மணி:சர்க்கரை இல்லாத ஒரு கோப்பை காபி அல்லது டீ உடைத்தகடலை அல்லது சுண்டல் ஒரு கோப்பை

இரவு 8.30 மணி: பகல் உணவைப் போலவே

படுக்கும் முன்: சர்க்கரை இல்லாத ஒரு கப் பால்.

இம்மாதிரி உணவைத் தயாரிக்க இரண்டு தேக்கரண்டி சூர்யகாந்தி எண்ணெயையோ அல்லது நல்லெண்ணையையோ உபயோகிக்கலாம்.

அசைவம் சாப்பிடுவோருக்கு: பகல் உணவிலும் இரவு உணவிலும் 100 கிராம் மீனோ கோழியோ சேர்த்துக்கொள்ளலாம். ஆட்டிறைச்சி 50 கிராம் அல்லது வாரமொரு முட்டையினையும் சாப்பிடச்சொல்லலாம். மற்றவை சைவ உணவைப்போலவேதான்.

ஒரு கோப்பைஎன்று மேலே குறிப்பிட்டு இருப்பதெல்லாம் நான்கு அவுன்ஸ் அல்லது 120மி.லி. லிட்டர் அளவையே குறிக்கும்.

சர்க்கரைநோயாளிக்கும் இருதய நோயாளிக்கும் சூர்யகாந்தி எண்ணெய் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் உணவில் நல்ல கட்டுப்பாட்டோடு இருந்தால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவுகளையும் குறைத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றேசொல்லலாம்.

Updated On: 9 Oct 2022 10:04 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...