stress tiredness to teenagers உங்களுக்கு தெரியுமா? ...மனஇறுக்கத்தால் சோர்ந்து போகும் டீன் ஏஜ் பருவம்....

stress tiredness to teenagers மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் என்ற கூற்றிற்கேற்ப மனசு நன்றாக இருந்தால்தான் செயல்பாடுகளும் சிறக்கும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
stress tiredness to teenagers உங்களுக்கு தெரியுமா? ...மனஇறுக்கத்தால் சோர்ந்து போகும் டீன் ஏஜ் பருவம்....
X

stress tiredness to teenagers


stress tiredness to teenagers

உளச்சோர்வு நோய்களிலேயே மிகக்கடுமையானது உளவியல் உளச்சோர்வு தான். இது ஒரு வகையான மன இறுக்கத்தினைச் சேர்ந்தது. இவர்களிடம் அடிப்படையான ஒரு சில குறைகள் வெளிப்படையாகத்தென்படும்.சகமனிதர்கள் மீது வெறுப்பு , மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை. இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக்கொள்வதுதான் ஒரே வழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு சகஜநிலைக்கு வந்தவர்கள் போல் காணப்படுவார்கள்.

உளவியல் உளச்சோர்வு பத்தில் ஒருவருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் லட்சத்தில் நுாறு பேரைத்தான் அதிகத்தாக்குதலுக்கு உட்படுத்தும்என்ற கணக்கும்கூறப்படுகிறது. அந்த நுாறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் , கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே டாக்டரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

நோய்க்கான அறிகுறிகள்

நம்பிக்கைக்கு உரியவர்களே கைவிடப்பட்ட உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப்பழக முடியாத நிலை, பொழுதுபோக்குகளில் ஆர்வமின்மை யாரோடும் ஒத்துப்போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை அமைதியின்மை, எரிந்துவிழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடிதலையில் பாரம், குறிக்கோள்இழந்த உணர்வு வாழ்க்கையின் பொருளற்ற உணர்வு, சிலருக்கு குற்ற உணர்வு என்று பல அறிகுறிகள்தென்படும். இவற்றில் சிலவற்றை வெளிப்படையாகக் காண இயலாது. பாதிக்கப்பட்டவர்கள் வாய்திறந்து சொன்னால்தான்தெரியும்.

உளவியல் உளச்சோர்வின் கொடூரத்தன்மை என்னவென்றால், நோயாளிகள் தங்களிடம் காணப்படும். அசாதாரண அறிகுறிகளும், நடத்தை மாற்றங்களும்,மற்றநோய்களைப்போல் குணப்படுத்த முடியாதது என்று தவறாகப்புரிந்து கொள்வதுதான். குழப்பமான நிலையில் தங்களைப்பார்த்து மற்றவர்கள் ஏளனமாக நினைக்கக்கூடும் என்ற உணர்வில் தான் பலர் தற்கொலை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் உளவியல் உளச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள் எதுவாக இருந்தாலும் அவை முற்றிலும் குணப்படுத்தக்கூடியதே என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

stress tiredness to teenagers


stress tiredness to teenagers

மூளையில் உள்ள செலட்டோனிக் என்ற ரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் உளச்சோர்வு மனிதனைத்தாக்குகிறது.அந்த ரசாயனத்தினைச் சமநிலையில் வைத்திருக்ககூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலுமே கிடைக்கின்றன. கூடிய மட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்து வந்தால் உளவியல் உளச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும் அவற்றில் சில.

உடற்பயிற்சிகள்

காலையில் எழுந்ததும் பூனைதன் உடலையும் மற்ற உறுப்புகளையும் நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டிப்பயிற்சி செய்தால்மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம்பாயும். சுறுசுறுப்பு தானாக வரும். இதுதவிர, ஸ்கிப்பிங்,ஓடுதல், அதிகாலைநடைப்பயிற்சி, ஆகியவை அவசியம். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தைச் சீராக ஓட வைக்க இந்த உடற்பயிற்சிகளே போதுமானதாகும்.

stress tiredness to teenagers


stress tiredness to teenagers

யோகா, தியானம்

ஒருவருக்கு போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும். மனஇறுக்கம் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகப்பயிற்சி மட்டுமே. அதேபோல் .குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு ,மனதில் வரும் எந்தப்பொருளின் மீதும் மனதைச்செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தவேண்டும்.இவ்வாறு சில நிமிடங்கள் மன தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத்தெளிவும் கிட்டும்.

உணவில் கட்டுப்பாடு

ஒருவருடைய எடை அவருடைய வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்றவாறு வைத்திருந்தாலே பலநோய்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டவராகவே இருப்பார். எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் உளவியல் உளச்சோர்வு நோய்க்கு மனஇறுக்கத்திற்கு ஆரம்பகால நுழைவு வாயில்கள் நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்து விடும் என்பது வேறுவிஷயம். அதற்குக் கட்டுப்பாடான உணவுதான்சிறந்த சிகிச்சை .காய்கறிகள் ,பழங்கம் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொண்டு, நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் உணவு முறையைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும்.

புகை, மது கூடாது

புகைபிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் உளவியல் உளச்சோர்வு நோய்கள் அதிகம் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீதமுடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நிம்மதியான துாக்கம்

நீங்கள்துாங்கி எழுந்தவுடன் புத்துணர்வும்சுறுசுறுப்பும் பெறவேண்டும். இல்லை என்றால் நீங்கள் நல்ல மனநிலையில் இல்லை என்று பொருள். ஒரு நாளைக்கு 6மணிநேரமாவது நல்ல துாக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல துாக்கத்தால் தான் புத்துணர்ச்சி தர முடியும்.குறிப்பிட்டநேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

stress tiredness to teenagersstress tiredness to teenagers

வேலையில் அக்கறை

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனதுடன் செயல்பட்டால்உளச்சோர்வுக்குஇடமிருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது. அளவுக்கு அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது. மன அழுத்தச் சூழலில் தொடர்ந்து வேலையைச் செய்தல் ஆகியவை உளச்சோர்வைத் துாண்டக்கூடியவை. இவற்றைக்கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்

தேவையற்ற முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர மனம் பலவீனப்படுவதோடு , எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டி வரும். இவைதான் பலருக்கு உளச்சோர்வு நோய் வரக் காரணம்.

இரட்டை வேடம் போடுவது யதார்த்தத்தை மறைத்து வைத்துக்கொண்டு வெளியில் நடிப்பது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுயமாகச்சிந்திக்கும் திறனை வளர்ப்பதும் மனம் திறந்து பேசி நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வதுதான் இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட வழி.

சமூகத்தோடு ஒப்புதல்

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இருதரப்பிலும் நல்லதுணையை தோழமையை உருவாக்கும் உறவுகளுடன் சேர்ந்து பொழுது போக்கு அம்சங்களில் கலந்து கொள்வது, இசை, பாட்டு, என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும், ஆகியன சமூக உறவோடு கலக்க உதவும்.

உளவியல் உளச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்துவரும் அச்சம் சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீதச் செயலுக்கு இட்டுச்செல்லும். அதனால் மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒரு நல்ல டாக்டரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்து கொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

Updated On: 23 Oct 2022 11:46 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...