மனஅழுத்தம் நீங்க 30வழிகள் படிச்சு பார்த்து ஃபாலோ பண்ணுங்க...-பாகம்-2

Stress Relief Quotes contd மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் என்று சொல்வார்கள். அதுபோல் நம் அனைத்து செயல்பாடுகளுக்கும் மனமே காரணம். எனவே மனதினை அமைதியாக வைக்க பழகுங்கள்..

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மனஅழுத்தம் நீங்க 30வழிகள்  படிச்சு பார்த்து ஃபாலோ பண்ணுங்க...-பாகம்-2
X

Stress Relief Quotes

(நேற்றைய தொடர்ச்சி....)

மாறிவரும் நாகரிக உலகில் மனஅழுத்தம் என்பது தவிர்க்கமுடியாதது. ஆனால் அதனை வரவிடாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை விட வந்துவிட்டால் என்ன வழிமுறைகளில் அதனைக் குறைக்கலாம் என்பதை நாம் பார்க்கவேண்டும்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

மனஅழுத்தம் என்பது நாமே உருவாக்கிக்கொள்வது என்று கூட சொல்லலாம். எந்த விஷயமானாலும் உடனடியாக பதட்டப்படுதல், கோபப்படுதல், சத்தம்போட்டு பேசுதல் உள்ளிட்ட காரணிகளே நமக்கு மனஅழுத்தத்தினை உருவாக்குகின்றன. இதுபோன்ற நேரங்களில் நாம் மனதில் 1,2,3, என வரிசையாக சொல்லிக்கொண்டே இருந்தால் மனஅழுத்தம் குறைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நமக்கு யாருமே மன அழுத்தத்தினை ஏற்படுத்தவேண்டாங்க... நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட்போனும், லேப்டாப், கம்ப்யூட்டர் இவைகளே போதும். நமக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளே இவங்கதான் பர்ஸ்ட் என்று கூட சொல்லலாம். நாம் வேலைசெய்யும்போது மக்கர் பண்ணிவிட்டால் அதாவது சர்வர் கிடைக்காவிட்டால் உடனே நமக்கு பிரஷர் எகிறிடுது...இதுலதாங்க ஸ்ட்ரெஸ் ஸ்டார்ட் ஆகுது... அது ஆனா போகுது... வரும்போது வரட்டும் என நாம் அமைதியாக இருக்க வேண்டும்..கவலைப்பட்டாலே ஸ்ட்ரெஸ் வந்துடுதுங்க....

சரி நேற்றைய தொடர்ச்சியை பார்ப்போமா...வாங்க..

Stress Relief Quotes


Stress Relief Quotes

16.நொறுக்கு தீனியை நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத்தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

17.வைட்டமின் வேண்டும் : வைட்டமின் பி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

18.அடையாளம் என்ன?

மனஅழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்கு தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்துவைத்துக்கொண்டால் அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்க முடியும்.

19.ஆகாயம் பாருங்கள்

அடைந்து கிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை அலையலையாய்ப் போகும் மேகங்களைப்பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

20.நடைப்பயிற்சி நலம்தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதுாரம் நடந்து வருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில்அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

21. வெந்நீர்க்குளியல்

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க்குளியல்போடுங்க என்கிறார்கள் மனநல டாக்டர். வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார்அவர்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

22.இசையால் வசமாகும்இதயம்: எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்திஇசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

23. செல்லப்பிராணிகள்:நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு , ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. முயன்று பாருங்கள்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

24.கவனம் குவியுங்கள்:மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக்குவியாமல் அலைபாயத்தொடங்கும். அப்போதெல்லாம், ஒருசின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தினை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாககூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம்,கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

25.நண்பர்களை அழையுங்கள்: மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப்பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி, அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

26.வஜ்ராசனத்தின் வல்லமை:மனஅழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கிலுள்ள எக்யூனாக்ஸ்ஃபிட்னஸ்சென்டரின்இயக்குனர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான். குழந்தை போல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக்குனிந்து முன்நெற்றியை நிலத்தில் பதியுங்கள்.

27.பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தினை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை. நேரம் கிடைக்கும்போது இதில் ஆர்வம் காட்டுங்கள். மன அழுத்தம்இருந்தால்தான் செய்ய வேண்டும் என்றில்லை. இல்லாவிட்டாலும் செய்தால் மனம் பக்குவப்பட வாய்ப்பு உள்ளது.

28.நிமிர்ந்து அமருங்கள்:

உங்களுக்கு சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனசு சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக, உட்காரும்போது ரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

29.மனம் விட்டு பேசுங்க:

முன்பெல்லாம் அக்காலத்தில் பேசுவதற்காகவே வீடுகளின் வாசலில் காற்றாட அமர்ந்து பேச திண்ணை கட்டினார்கள். ஆனால் காலமும் மாறியது. பேச்சும் குறைந்தது. நகரத்தில் வாழ்பவர்கள் எப்படி அபார்ட்மென்டில் அடைந்து கொள்கிறார்களோ அதுபோல் கிராமத்தில் வாழ்பவர்கள் வீடுகளினுள் அடைந்துகொள்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோரும் பேசறாங்க...யாரோட? அவரவர்களின் ஸ்மார்ட்போனில்தான். தன் மன பாரத்தினை குறைக்க மற்றவர்களிடம் அட்லீஸ்ட் ஒருவரிடமாவது உங்கள் மனதிலுள்ள விஷயங்கள் பற்றி பேசிடுங்க.... அதுவே போதும்ஸ்ட்ரெஸ் குறைந்துவிடும்...

30.செயல்களை திட்டமிடுங்கள்:நாம்அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுவிடுங்கள்.இதுஉங்கள் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கும். வேலை செய்யும்போது உட்கார்ந்து பிளான் போடுவதை விட முன்கூட்டியே அதனை செய்து பாருங்களேன்....

31. டைம் மேனேஜ்மென்ட்:

எந்த இடத்திற்கு செல்வதென்றாலும் அந்த நேரத்திற்கு முன்னதாகவே அங்கிருக்கும்படி செல்லுங்கள் இது நம் மன அழுத்தத்தினைக்குறைக்கும். கடைசிநேரத்தில் அவசர அவசரமாக கிளம்பும்போதுதான் போக்குவரத்து நெரிசல் வரிசை கட்டி வரவேற்கும். கடைசிநேரத்தில் விமானத்தில் சென்றாலும் கூட வானிலை பிரச்னை வரும். எனவே முடிந்தவரை முன்னால் அதாவது குறித்தே நரத்திற்கு முன்னதாக கிளம்ப பாருங்கள்.

Stress Relief Quotes


Stress Relief Quotes

32.போன் பேசறதைக் குறைச்சிடுங்க....

இன்றைய இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் எல்லோரும் இருக்கின்றனர். அவரவர்களின் அறையில் ஸ்மார்ட்போன்களோடு.. வாயில்லா ஜூவனோடு பேசும்போது உங்கள் மன பாரம் குறையாது. எகிறிவிடும்.. ஜாக்கிரதை... அதிக நேரம் போனில் பேசுவதும் உங்கள் மனஅழுத்தத்தினைக்கூட்டும். எனவே தேவையானவற்றை மட்டும் பேசுங்க...

இதுவரை உங்களுக்கான 30வழிகளை சொல்லிவிட்டோம்.இதனை உரிய முறையில் கடைப்பிடித்தால் நீங்கள்தான் ஸ்மார்ட் என்று கூட சொல்லலாம். பிரச்னைகள் வந்தபின் அலசி ஆராய்வதை விட வரும்முன்காப்பதே இன்றைய வாழ்க்கைக்கு சிறந்தது. எனவே நோய்கள் வரும் முன் காப்போம் ... ஆரோக்யத்தினை....

Updated On: 18 Oct 2022 2:55 PM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
 2. தமிழ்நாடு
  கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
 3. இந்தியா
  Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
 4. தமிழ்நாடு
  ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 5. தமிழ்நாடு
  தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
 6. இந்தியா
  Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
 7. திருநெல்வேலி
  திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
 8. குமாரபாளையம்
  சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
 9. தேனி
  தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
 10. சிவகாசி
  சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!