/* */

மன அழுத்தமே பெரிய பிரச்னை... அதில், இத்தனை வகைகளா?

இன்று உடல் சார்ந்த பிரச்னைகளை காட்டிலும், மனிதன் மனம் சார்ந்த பிரச்னைகளில் தான் அதிகமாக தவிக்கிறான். அதிலும், மன அழுத்த வகைகளை பார்க்கும்போது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

HIGHLIGHTS

மன அழுத்தமே பெரிய பிரச்னை... அதில், இத்தனை வகைகளா?
X

மனிதனை துன்புறுத்தும் மன அழுத்தம். (கோப்பு படம்).

எப்பொழுதும் சலிப்பும் சோர்வும் எதிலும் ஆர்வமின்மையும் ஒன்றன்பின் ஒன்றாக துரத்துவது போல் தோன்றும் உணர்வை நம்மில் பலர் எதிர்கொள்கிறார்கள். இதற்கு பின்பு வேலை, குடும்பம், பணிச்சுமை, உறவுகளுக்குள் விரிசல், தனிப்பட்ட வேலை என பலவும் காரணமாக இருக்கலாம். இந்த மன அழுத்தம் என்பது ஒன்றை மட்டும் குறிப்பிடுவது அல்ல. மன அழுத்தமும் பல வகைப்படும். அது குறித்து பார்க்கலாம்.

மன அழுத்தம்

எப்போதுமே, கவலையே இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால் எப்போதும் கவலையாகவோ ஏதோ ஒன்று அழுத்தமாகவோ இருந்தால் குறிப்பாக ஓய்வில் இருக்கும் போது கூட மனம் குறிப்பிட்ட ஒன்றை சிந்திப்பதை நிறுத்தாமல் இருந்தால் அது இறுதியில் மன அழுத்தத்தை உண்டு செய்யும்.

இது தற்காலிகமாக இருக்கலாம். எனினும் அது கடந்து சென்றவுடன் மனம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால், அது நீடித்தால் மன அழுத்தமானது இதய பிரச்சனை அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை உண்டு செய்யும். இந்த மன அழுத்தம் வகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.


கடுமையான மன அழுத்தம்

மன அழுத்தம் என்பது, அனைவருக்கும் ஏற்பட கூடியது. இது புதிய மற்றும் சவாலான சூழ்நிலைக்கு உடலின் உடனடி எதிர்வினை. கார் விபத்தில் இருந்து சட்டென்று தப்பிக்கும் போது, ஒருவர் உணரக்கூடிய மன அழுத்தம் இது.

கடுமையான மன அழுத்தம் என்பது, உண்மையில் அனுபவிக்கும் போது வெளியே வரலாம். இது ரோலர் கோஸ்டரில் இருந்து செங்குத்தான மலைச்சரிவில் பனிச்சறுக்கு செய்யும் போது ஏற்படும் பயம் போன்று இருக்கும்.

இந்த கடுமையான மன அழுத்தங்கள் உங்களுக்கு எந்த தீங்கும் செய்யாது. இது நல்லதாகவும் இருக்கலாம். மன அழுத்த சூழ்நிலைகள் உங்கள் உடலுக்கும் மூளைக்கும் எதிர்கால மன அழுத்த சூழ்நிலைகளுக்கும் சிறந்த பதிலை உருவாக்கும் வகையில் தயார் செய்கிறது.

இந்த ஆபத்து கடந்துவிட்டால் உடல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ஆனால் கடுமையான மன அழுத்தம் ஒருவர் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டது போன்ற இந்த வகை மன அழுத்தம் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு அல்லது பிற மனநல பிரச்சனைகளை உண்டு செய்யகூடும்.


​'எபிசோடிக்' கடுமையான மன அழுத்தம்

'எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ்' என்பது அடிக்கடி கடுமையான மன அழுத்தத்தை குறிக்கிறது. ஒரு விஷயம் நடக்கலாம் என்று ஒருவர் சந்தேகிக்கும் விஷயங்களை பற்றி அவர் கவலையுடன் இருந்தால் இந்த அழுத்தம் உண்டாகலாம். இந்த அழுத்தத்தில் அவரது வாழ்க்கை குழப்பமாக இருக்கலாம். இந்நிலையில் நெருக்கடிக்கு அடுத்த நிலைக்கு செல்லலாம்.

கடுமையான மன அழுத்தத்தை போன்றே எபிசோடிக் கடுமையான மன அழுத்தமும் உடல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் பாதிக்க செய்யும். கட்டுப்பாடான தொழில்களில் இருப்பவர்களுக்கு அடிக்கடி மன அழுத்த சூழ்நிலைகள் உண்டாகலாம்.

​உடல் அழுத்தம்

காயம், தொற்று அல்லது அறுவை சிகிச்சை, தீவிர உடல் உழைப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, சோர்வு, ஹார்மோன் சமநிலையின்மை, பல் பிரச்சனைகள் போன்றவற்றால் உண்டாகும் அதிர்ச்சியே உடல் அழுத்தத்துக்கு காரணம் ஆகும். எனினும் இவை நாள்பட இருக்காது.


​உளவியல் மன அழுத்தம்

இந்த மன அழுத்தம் வரும் போது பயம், விரக்தி, சோகம், கோபம் மற்றும் துக்கம், பொறாமை, பதட்டம், பீதி தாக்குதல்கள், சுய விமர்சனம் போன்றவற்றால் உண்டாகும் உணர்ச்சி ஆகியவை அடங்கும். இது அடிப்படையில் ஒருவர் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது உண்டாகும் உணர்ச்சி மற்றும் உடலியல் எதிர்வினைகளை குறிக்கும்.

இது உறவுகளுடன், பணி செய்யும் இடத்தில், குடும்ப உறவினர்கள், நெருங்கியவர்களுடன் உண்டாகிறது. வேலை இழப்பு, அன்புக்குரியவர்களின் இழப்பு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவையும் இந்த வகை மன அழுத்தத்தை உண்டு செய்யும். தன்னம்பிக்கை மிகுந்து இருப்பவர்களிடம் இத்தகைய அழுத்தம் உண்டாகாது என்பதோடு இது நீடிக்க கூடியதல்ல.

நாள்பட்ட மன அழுத்தம்

ஒருவர் நீண்ட காலம் அதிக அழுத்த அளவை கொண்டிருந்தால், அவருக்கு நாள்பட்ட மன அழுத்தம் இருக்கலாம். இந்த நீண்டகால மன அழுத்தம் அவரது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை உண்டு செய்யும் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம்.

இந்நிலை கவலை, இதய நோய், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு, நாள்பட்ட மன அழுத்தம், தலைவலி, வயிற்று கோளாறு சிரமம் மற்றும் தூக்கமின்மை போன்ற நோய்களை உண்டு செய்யும்.

சரிங்க, மனம் அழுத்தம் போக்க வழியும் இருக்குதுங்க... இந்த மூன்று வாசகங்களை நினைவில் வைத்துகொண்டால் போதும்...

'டேக் இட் ஈஸி',

'இதுவும் கடந்து போகும்',

'வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா...'

இதுதவிர. முடிந்தால் யோகா, தியானம் பண்ணுங்க... பிராணயாமம் அதாவது மூச்சுப்பயிற்சி செய்யுங்க... மன அழுத்தம் ஓடியே போகும்.

Updated On: 22 Dec 2022 5:24 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு