உடல் ஆரோக்கியத்துக்கு சோயாபீன்ஸ் சாப்பிடுங்க...!

soybean in tamil- நீரழிவு நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை தடுக்கும், உடல் எடையை குறைக்கும் என, ஏராளமான நன்மைகள் நிறைந்த சோயாபீன்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடல் ஆரோக்கியத்துக்கு சோயாபீன்ஸ் சாப்பிடுங்க...!
X
soybean in tamil- நன்மைகள் நிறைந்த சோயாபீன்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்.

soybean in tamil-சோயா பீன்ஸில் இருக்கும் நன்மைகள்

இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் போலேட் போன்றவை அதிகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

‘சோயாபீன்ஸ்’ உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.சோயா பீன்ஸ் ஆனது சோயா மாவு, சோயா புரதம், டோபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட வகைகளாக உண்ணப்படுகிறது.


மேற்கத்திய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்கள் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். புரதத்தை உருவாக்க தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் உள்ளது. மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் போலேட் போன்றவை அதிகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. மேலும் வேகவைத்த பச்சை சோயாபீன்ஸில் 141 கி கலோரிகள்,12.35 கிராம் புரதம், 6.4 கிராம் கொழுப்பு, 11.05 கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் நார்ச்சத்து உள்ளது. சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

உடல் எடை குறையும்

உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம். ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.


புற்றுநோயை தடுக்கும்

சோயாபீன்ஸ்களில் காணப்படும் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஹார்மோன்களுடன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் உள்ளவர்கள் தங்களது உணவில் சோயாபீன்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொண்டால், நல்ல பலனைத்தரும் என்கிறார்கள் டாக்டர்கள்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்

டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது. சோயா பீன்ஸ்களில் உள்ள ‘ஐசோஃப்ளேவோன்கள்’ நீரழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே நீரழிவு நோயாளிகள் அடிக்கடி சோயாபீன்ஸ் சாப்பிடலாம்.


எலும்புகளை பலப்படுத்தும்

‘சோயா பீன்ஸ்’ எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சோயா பீன்ஸில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம். எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் தொடர்ந்து சோயா பீன்ஸினை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

சோயாபீன்ஸ்களை யார் சாப்பிடக்கூடாது ?

சோயா பீன்ஸ் மிகவும் பாதுகாப்பான உணவாகும். எந்தவொரு உணவு வகையும் குறிப்பிடத்தக்க சிலருக்கு ஒவ்வாமைகளை ஏற்படுத்தக் கூடும். அது என்னென்ன என்று பாப்போம்.

தைராய்டு

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் சோயா பீன்ஸ்களை உட்கொள்ள கூடாது. சோயாபீன்ஸ்களில் காணப்படும் சில கலவைகள் தைராய்டு செயல்பாட்டில் குறுக்கிடலாம் என்றும், இது நோய்களை தீவிரப்படுத்தும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகிறது.


வயிற்றுப்போக்கு

சோயாபீனில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். ‘IBS’ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோயா பொருட்களை உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


ஒவ்வாமை

சோயாபீன்ஸில் காணப்படும் கிளைசினின், காங்கிளிசினின் என்ற இரண்டு புரதங்களால் சோயா ஒவ்வாமை ஏற்படுகிறது. இது பொதுவாக எல்லா வயதினரிடத்திலும் காணப்படுகிறது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இதனால் ஏற்படும் என்பதால் அளவாக எடுத்து கொள்வது நல்லது.

நன்மைகள் ஆயிரம்

சோயாபீன்ஸை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். சோயாபீன், புரதங்களின் உயர்ந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. இதனை இறைச்சி புரதத்திற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.

இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஊட்டச்சத்து அளவுகள்: புரதங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

சோயாபீன் கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. கார்டியோவாஸ்குலர் கோளாறுகளை தடுப்பதில் சோயா புரதத்தின் பதில் இன்னமும் விவாதத்தின் தலைப்பாக அமைகிறது.


சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. ஐசோபிளவோன் என்பது பைடோ-ஈஸ்ட்ரோஜனின் ஒரு வகை. இது சோயா-புரதத்தில் உள்ளது. புற்றுநோய் தடுப்புக்கு ஐசோபிளவோன் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கூட பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துக்களை குறைப்பதற்காக பயன்படுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து, சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு அமைப்பை அதிகரிக்க உதவுகிறது.

சோயா நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடல் எடையைக் குறைக்க, மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவக் கூடியவை ஆகும். மேலும் சோயாபீன் செரிமான சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சோயாபீன்களை பச்சையாக உண்பது நச்சுத்தன்மை அளிக்கக் கூடியதாகும். எனவே சாப்பிடும் முன்பாக, அவை முறையாக சமைக்கப்பட வேண்டும்.

Updated On: 21 Feb 2023 7:03 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...