சொரியாஸிஸ் நோயினை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா?
![சொரியாஸிஸ் நோயினை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா? சொரியாஸிஸ் நோயினை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா?](https://www.nativenews.in/h-upload/2022/08/10/1574701-psoriasis-symptoms-and-signs.webp)
உடல் முழுவதும் சொரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் (மாதிரி படம்)
மனிதர்களை தற்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் தாக்குகிறது. இப்புதுநோய்கள் டாக்டர்களால் கூட இனங்காணமுடியாததாக ஒருசில நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பின் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர்தான் நோயின் தன்மையினையே டாக்டர்கள் உணருகின்றனர். அந்த வகையில் சொரியாஸிஸ் நோயினை ஹோமியோ சிகிச்சையில் முழுவதும் குணப்படுத்த முடியுமா? என்பதைப் பற்றி பார்ப்போமா.
தோலில் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இவை பிறப்பிலேயே உருவான சில நோய்கள்,பரம்பரையாக வரும் நோய்கள், சத்துக்கள் குறைவானதனால் உருவாகும் நோய்கள், வைரஸ், காளான், போன்ற தொற்றுக்களினால் வரும் நோய்கள், ஒவ்வாமையினால் ஏற்படும் நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள் போன்ற பல வகையான தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றில் மிகவும் தொல்லை தரும் தோல் நோய்கள் பற்றி காண்போம்.
செதில்படை நோய் (சொரியாஸிஸ்)
சொரியாஸிஸ் என்ற நோயை தமிழில் காளாஞ்சகப்படை என்றும் கூறுகிறோம். இந்த செதில் படை எனும் செதில் உதிரும் நோயில் சிவப்பான படை போன்று தோன்றி அதற்கு மேல் வெள்ளையாகவோ, சாம்பல் நிறமாகவோ மீனி்ன் செதில்கள் போன்று உதிர்ந்து கொண்டே இருக்கும். இது பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான பயத்தையும் அருவெறுப்பையும் கண்டிப்பாக ஏற்படுத்தும். இது முழங்கை, முழங்கால், கழுத்தின் பின்பகுதி, முதுகு, தலைப்பகுதி போன்ற இடங்களில் தோன்றக்கூடும். இது தலைப்பகுதியில் அடை அடையாக உற்பத்தியாவதால் முடி உதிர்வதற்கும் மெலிவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது.
நமது தோலில் வெளிப்புறம், உள்ள திசுக்கள் நமது கண்ணுக்கு தெரியாமலேயே அவ்வப்போது உதிர்ந்து தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் குணம் உடையது. இந்த மாற்றமானது இயல்பாக மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். ஆனால் இந்த செதில் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் வேகப்படுத்தப்பட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மாற்றம் நடைபெறுவதால் மீன் செதில் போன்று தோல் உதிர்ந்து கொண்டே இருக்கும். இந்நோயை குணப்படுத்த முடியாது. கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற தவறான நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. ஆனால் இதை ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது நாள்பட்ட நோய் என்ற காரணத்தினால் உங்கள் டாக்டரோடு நீங்கள் முழுமையாக ஒத்துழைத்தால் இந்த நோயை அடியோடு ஒழிக்க முடியும். ஹோமியோபதி உள் மருந்துகளால் மட்டுமே இந்த நோயினை முழுமையாக குணப்படுத்த முடியும்.
வண்டுக்கடி (எக்ஸிமா)
எக்ஸிமா என்பது தமிழில் வண்டுக்கடி என்று சொன்னாலும் வண்டு கடிப்பதற்கும், மற்ற கிருமிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இது இயல்பாக உடலில் தோன்றக்கூடிய ஒருவியாதி. ஹோமியோபதி தத்துவத்தின் அடிப்படையில் இது சோரிக் மாயாஸம்மால் வருகிறது. மாயாஸம் என்பது தோலில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான வியாதிகளுக்கும் அடிப்படை காரணமான பக்குவமாகும்.
இது சில சமயம் டிரை எக்ஸிமா அதாவது தோல்வறண்டு தடிமனாக உள்ளதாகவோ, வீப்பிங்டைப் அதாவது கொப்புளங்கள், புண் ஆகியனவை ஏற்பட்டு எக்ஸிமாவில் தீவிரமாக அரிப்பு ஏற்பட்டு புண்ணாககூடிய நிலைக்கு தள்ளப்படும். இதற்குமேல் தொற்றுக்கிருமிகள் தாக்கி, கொதித்து, சீழ் பிடித்து நீர் வர ஆரம்பிக்கும். இதனை களிம்பு போன்ற வெளிப்பூச்சு மருந்துகளால் கட்டாயம் அமுக்ககூடாது. அப்படி அமுக்கப்படும்போது, அது வேறு வித நோயாக குறிப்பாக நுரையீரல் தொந்தரவாகவோ அல்லது ஆஸ்துமா தொந்தரவாகவோ மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே முறையான ஹோமியோபதி உள் மருந்துகளால் இந்த தோல்நோய்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டால் தான் இந்த நோயாளி முற்றிலும் குணமடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ந்து ஒரு ஆரோக்யமான மனிதனாக மாற முடியும். இதற்கு சல்பர், கிராபைடிஸ், பெட்ரோலியம் போன்ற மருந்துகளை பயன்படுத்தலாம்.
வயதான ஒருவர் சுமார் 12 வருடங்களாக ஆஸ்துமா நோாயல் மிகுந்த அவஸ்தைப்பட்டு பல வைத்தியங்கள் செய்து பலனளிக்காமல் இருந்தார். அவரதுமுழு விவரத்தையும் ஆராய்ந்த பிறகு கிராபைடிஸ் என்ற மருந்தினை கொடுத்த பத்து நாட்களுக்கு பிறகு இரண்டு காலிலும் எக்ஸிமா என்ற நோய் வெளிப்பட்டு ஒரு மாத காலமாக தோலில், சீழ் போன்ற வடிந்த பின்னர், தோல் படிப்படியாக குணமடைந்து அதே சமயத்தில் அவருக்கு ஆஸ்துமா தொல்லையும் நின்று விட்டது. இன்று வரை அவருக்கு இரண்டு தொல்லைகளும் தலைகாட்டவே இல்லை. அவருக்கு சிறுவயது முதலே இருந்து வந்த எக்ஸிமாவை வெளிப்பூச்சுமருந்துகளால் தீவிரமாக அமுக்கியதன் காரணமாக ஆஸ்துமா நோய் ஏற்பட்டது. ஆகவே இந்த நோயாளிக்கு சரியான மருந்தை கொடுத்தபோது எதன் விளைவாக ஆஸ்துமா ஏற்பட்டதோ, அந்த தோல் நோயினை முழுமையாக வெளிக்கொணர்ந்ததால் இரண்டு நோய்களும், முற்றிலுமாக குணமடைந்தது.
நன்றி :டாக்டர். முகுந்தன்,சேலம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu